தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்

Loading

தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மின்பகிர்மான வட்ட தலைவர் பாண்டியராஜா தலைமையில் மதுரையில் நடைபெற்றது.இதில் மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணியன், இணை பொது செயலாளர் முத்துலிங்கம், மாநில செயலாளர் சாமி அய்யா, பொறியாளர் பிரிவு தலைவர் தங்கமுத்து, துணை தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மகளிரணி செயலாளர் காந்திமதி, துணைத் தலைவர் சுப்பிரமணியன், வட்டச் செயலாளர் சிதம்பரம், பொருளாளர் அருள், மாநில இளைஞரணி செயலாளர் கருப்பசாமி, மாநில அமைப்புச் செயலாளர்  வீராசாமி, மாநில பொருளாளர் முத்துச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மின்சார வாரியம் தொடர்ந்து பொதுத்துறையாக பொதுத்துறையாக செயல்பட வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்திட வேண்டும் எனவும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

0Shares

Leave a Reply