அதிமுக விவகாரத்தில் பாஜக தலையீட்டை ஏற்க மாட்டோம்: ஜெயகுமார் திட்டவட்டம்
சென்னை, ஜூலை –
அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிடவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. என்றும் விரும்பவில்லை என்றும் மாஜி அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்
சென்னை மெரினாவில் உள்ள அண்ணா எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் இன்று அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுகவினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.உடன் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார்,கோகுல இந்திரா மற்றும் கட்சியினர் இருந்தனர்.
இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் .ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.
அதிமுகவில் அடிமட்ட தொண்டன்கூட உயர்மட்டத்திற்கு வரமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத்தான் தமிழ்மகன் உசேன் அவைத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதிமுகவில் தான் கொடி பிடிக்கின்ற தொண்டன்,,கொடி கட்டிய காரில் வர முடியும். நம்முடைய அவைத்தலைவர் 1953 ல் அண்ணா தலைமையிலான திமுக. வட்ட செயலாளராக பணியைத் தொடங்கி, கன்னியாகுமரி மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக உயர்ந்தவர்.எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தைக் கன்னியாகுமரி மாவட்டத்தில் துவக்கிய பெருமை பெற்றவர். அதிமுகவிற்காக இன்றுவரை திசை மாறாமல் எந்தவிதமான ஆசாபாசங்களுக்கும்,விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல்,கட்சி ஒன்றே என் உயிர் மூச்சாக வாழ்ந்து கொண்டிருப்பவர் தமிழ்மகன் உசேனை அவைத்தலைவராக அனைத்து தொண்டர்களும் மகிழ்ச்சி கொள்ளத்தக்க அளவில் பொதுக்குழு தேர்வு செய்துள்ளது. எம்ஜிஆர் இந்த இயக்கத்தை உருவாக்கி ,ஜெ கட்டிக்காத்து இன்றைக்கு ஒற்றை தலைமைதான் வேண்டும் என்ற அந்த ஒரே குரலோடு, ஒரு குடையின் கீழ் இன்றைக்கு எடப்பாடியார்தான் ஒற்றை தலைமைக்கு வரவேண்டும் என்ற அந்த குரல் கழகத்தினர் மத்தியில் ஒலித்து வரும் 11 ம் தேதி ஒரு செயல் வடிவம் பெறும்.
இவ்வாறு தெரிவித்தார்.
அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் அவமதிக்கப்படவில்லை. யாரையும் அவமதிக்கும் எண்ணம் அதிமுக தொண்டர்களுக்கு கிடையாது..அதிமுகவின் .. பொதுக்குழுவில் ஒற்றை தலைமைதான் வேண்டும் என்ற தீர்மானம் ஜூலை 11 ம் தேதி நிச்சயம் நிறைவேறும்ஒட்டுமொத்தமாக எல்லோரும் ஒற்றை தலைமை,ஒற்றை குடையின் கீழ் அனைவரும் வந்துவிட்டார்கள்.அதற்கு . ஆதரவு தராமல் நீதிமன்றத்தை அணுகுவது,தேர்தல் ஆணையத்தை அணுகுவது, பிரச்னைகளை உருவாக்குவதால் கட்சியினர் கடும் மன உளைச்சல்.இருக்கிறாரே ஓ.பன்னீர்செல்வம் கலகம் செய்கின்ற அளவுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்திவிட்டரே என்று ஆதங்கப்பட்டுவருகிறார்கள்.
ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியைச் சந்தித்தது குறித்து நான் எந்த கருத்தும் சொல்லவில்லை.பொதுக்குழுவைப் பொறுத்தவரையில் ஒற்றை தலைமை வேண்டும் என்பதுதான் நிலைபாடு.அவர் எதற்காகச் சந்தித்தார் என்று நான் சொல்ல முடியாது.
பாஜகவை பொறுத்தவரை மூன்றாவது கட்சிதான். எந்த ஒரு மூன்றாவது நபர் தலையீட்டையும் அதிமுக எந்த காலகட்டத்திலும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. விரும்பவும் இல்லை.அவர்களும் தலையிடவில்லை.நாங்களும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.தலையிடாத விஷயத்தை நீங்கள் எப்படிக் கேட்க முடியும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார் தெரிவித்தார்.