அதிமுக பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு வடசென்னை அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்  

Loading

 

சென்னை, ஜூன்- 22

அதிமுக பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு அக்கட்சியின் வடசென்னை வடகிழக்கு மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆதரவு  தெரிவித்தார்,

 

வடசென்னை வடகிழக்கு மாவட்ட அதிமு செயல்வீரர்கள் கூட்டம் தண்டையார்பேட்டையில் நடைபெற்றது, இக்கூட்டத்திற்கு தலைமையேற்று பேசிய மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் நல்லவர் தான் பண்புள்ளவர் தான் ஆனால் கட்சியை நடத்தி செல்ல நல்லவரை விட வல்லமைமிக்க தலைமை தேவை. கட்சியில் மற்றவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்க்கும் தலைமை பண்பு உள்ள தலைவர் தேவை. அது ஒற்றைத்தலைமையால் தான் முடியும். அது அதிமுக பொதுசெயலாளர் பொறுப்பை எடப்பாடி பழனிசாமி ஏற்றால் தான் சிறப்பான எதிர்க்கட்சியாக அடுத்த முறை அதிமுக ஆளுங்கட்சியாக முடியும்

முதலமைச்சரை மதிக்கவேண்டும் தான் அது அரசியல் நாகரீகம். ஆனால் முதலமைச்சரை பார்த்து அடிக்கடி கும்பிடாத  ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி தான்.  அதிமுக பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டால் கட்சி உத்வேகத்துடன் இருக்கும்.

 

இன்றைக்கு யார் யாரோ தாங்கள் தான் எதிர்க்கட்சி என்கிறார்கள், நான்கு அம்சங்களை மட்டுமே சொன்னால் எதிர்க்கட்சியாகி விட முடியுமா. சட்டமன்றத்தில் பெரும்பான்மை எண்ணிக்கையை கொண்டது எதிர்க்கட்சியா. பெரும்பான்மை மக்களின் வாக்குகளை பெற்றது எதிர்க்கட்சியா என்பதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், எடப்பாடி பழனிசாமி என்ற ஒற்றை தலைமை வந்தால் அதிமுக இன்னும் சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட முடியும், இரட்டை தலைமை இருந்தால் எதிர்க்கட்சி தலைவர் யார் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் குழப்பம் தான் நிலவும் எனவே கட்சியின் எதிர்கால நலன், தொண்டர்களின் நலன் கருதி ஒற்றை தலைமையே சிறந்தது . அதன்காரணமாகவே வடசென்னை வடகிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் முதல் தீர்மானமாக அதிமுகவில் ஒற்றைத்தலைமை அவசியம் என்பதை நிறைவேற்றினோம் அதிமுக பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டால் கட்சி உத்வேகத்துடன் இருக்கும். அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் வெள்ளத்தில் உற்சாக பவனி வருவார் நம்முடைய வடசென்னை வடகிழக்கு மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டந்தோறும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுக பொதுக்குழுவுக்கு வந்து எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வேண்டும், இவ்வாறு  அவர் பேசினார்

இந்த கூட்டத்தில் எஸ்எம் சீனிவாச பாலாஜி, நித்தியானந்தம், என்.எம்.பாஸ்கரன் வியாசர்பாடி இளங்கோவன், எ.கணேசன், செந்தில்குமார், எஸ்.லட்சுமி, வண்ணை கணபதி, செல்வராணி, து.சம்பத், ஜஸ்டீன் பிரேம்குமார் முத்து செல்வம், சதீஷ்பாபு நெல்லை குமார் எஸ்.ஆர்.அன்பு, எம்எம்கோபி,  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *