கொரியர் வழியாக கஞ்சா விற்பனை… ஒரே நாளில் 2.150 கிலோ கிராம் கஞ்சா மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N.ஹரி கிரன் பிரசாத் IPS கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இந்நிலையில் ராஜக்கமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் லூயிஸ் லாரன்ஸ் எறும்புகாடு பகுதியில் உள்ள ஒரு மீன் வலை தயாரிக்கும் கம்பெனி பின்புறம் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவலர்கள் சகிதம் அங்கு சென்றபோது அங்கே சந்தேகப்படும்படியாக நின்ற மூன்று பேரை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்த ஜெரிஸ் (24), மேலராமன்புதூர் பகுதியை சேர்ந்த பிரிஜின் பிரகாஷ் (22) மற்றும் எறும்புகாடு பகுதியை சேர்ந்த வினோத் (28) என்பது தெரியவந்தது.
பின்பு அவர்களை பிடித்து தீவிர விசாரணை செய்தார். மேலும் அவர்களை சோதனை செய்த போது அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்து அந்த பகுதியில் விற்பனை செய்தது தெரியவந்தது. அதன்பின் அவர்களிடமிருந்த 1.100 கிலோ கஞ்சா, 10,700 /- ரூபாய் மற்றும் மூன்று இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தார். மேலும் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் ஹைதராபாத்தில் இருந்து தனியார் கொரியர் சர்வீஸ் வழியாக கஞ்சாவை பெற்றது விற்பனை செய்தது தெரியவந்தது.
பின்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனியார் கொரியர் நிறுவனத்தை நேரில் ஆய்வு மேற்கொண்டு, கொரியரில் உள்ள அனுப்புனர்,பெறுநர் விவரங்கள் மற்றும் செல்போன் நம்பர்களை சரிபார்த்த பின்னரே உரியவரிடம் கொரியரை ஒப்படைக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். பின்பு அவர்கள் மீது காவல் நிலைய ஆய்வாளர் காந்திமதி வழக்கு பதிவு செய்தார்.
இது போல் நேசமணி நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயகுமார் நெசவாளர் காலனி அருகே கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவலர்கள் சகிதம் அங்கு சென்றபோது அங்கே சந்தேகப்படும்படியாக நின்ற இருவரை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் ராமன்புதூர் பகுதியை சேர்ந்த தீபு (19) மற்றும் மேலராமன்புதூர் பகுதியை சேர்ந்த வீரமணி (20) என்பது தெரியவந்தது. பின்பு அவர்களை பிடித்து தீவிர விசாரணை செய்தார். மேலும் அவர்களை சோதனை செய்த போது அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்து அந்த பகுதியில் விற்பனை செய்தது தெரியவந்தது. அதன்பின் அவர்களிடமிருந்த 1 கிலோ 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து
அவரகள் மீது காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலட்சுமி வழக்கு பதிவு செய்தார்…