வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இந்திய உழவர் உரக் கூட்டுறவு நிறுவனம் இணைந்து நானோ யூரியா ட்டோரன் மூலம் தெளிக்கும் பணியை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்
உளுந்தூர்பேட்டை. ஜூன் 15,
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஒன்றியத்திற்குட்பட்ட பா.கிள்ளனூர், டி. ஒரத்தூர் கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இந்திய உழவர் உரக் கூட்டுறவு நிறுவனமும் இணைந்து நானோ யூரியா அந்தரத்தில் பறக்கும் (ட்டோரன்) மூலம் மருந்துகளை விவசாய பயிர்களான கரும்பு, நெல், வாழை, மக்காச்சோளம் என அனைத்து பயிர்களுக்கும் மருந்துகளை தெளிப்பது குறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரம் தலைமையில் செயல் விளக்கம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட வேளாண்மைத்துறை அதிகாரிகள் நானோ யூரியாவை பயன்படுத்தும் முறையை குறித்தும் அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் இந்த திரவ ரசாயன யூரியாவை இலைகள் மூலம் செலுத்துவதால் அதிக மகசூல் தரும் என எடுத்துரைத்து விளக்கிக் கூறினார்கள்.
இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அவர்கள் விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ள கரும்பு பயிருக்கு திரவ ரசாயன யூரியாவை அந்தரத்தில் பறக்கும் சென்று மருந்துகளை தெளிக்கும் ட்ரோனில் குறித்து கேட்டறிந்த பின்பு தெளிக்கும் பணியை ஆய்வு செய்தார். அப்போது அரசு அதிகாரிகள் உட்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.