தி.மு.க., ஒன்றிய நிர்வாகிகள் தேர்தலில் தொண்டர்கள் ஆர்வம் !

Loading

ஈரோடு ஜூன்
 ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய திமுக நிர்வாகிகள் தேர்தலில் விருப்ப மனு வாங்கும் பணிநேற்று மாலையுடன் நிறைவடைந்தது ஈரோடு தெற்கு மாவட்டத்தில் வழக்கறிஞர் மற்றும் செயலாளர் பார் இளங்கோவன் வடக்கு மாவட்டத்தில் பாலவாக்கம் சோமு ஆகியோர் கட்சி நிர்வாகிகளிடம் விருப்பமனு பெற்றனர் ஈரோடு தெற்கு திமுக மாவட்டத்தில் 13 ஒன்றியஙகள் வடக்கு மாவட்டத்தில் 15 ஒன்றியங்களில் விருப்பமனு பெறப்பட்டது இதுகுறித்து கட்சி தலைமை அலுவலகத்தில் பார் இளங்கோவன் கூறியதாவது…
ஒவ்வொரு பதவிக்கும் 50க்கும் மேற்பட்ட நபர்கள் விண்ணப்பித்துள்ளனர் தகுதி வாய்ந்த நபர்கள் ஒருமித்த கருத்து அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர் கடந்த 10 ஆண்டுகளாக திமுக எதிர்க்கட்சியாக இருந்தது அப்போது திமுகவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த பல நிர்வாகிகளுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை, தகுதியின் அடிப்படையில் கடந்த பத்தாண்டுகள் கட்சியில் உறுப்பினராக இருந்தவர்களுக்கும் பதவிகள் கிடைக்கும் திமுக தலைவர் மற்றும் முதல்வர் பல்வேறு திட்டங்களை அறிவித்து மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
இருந்தபோதிலும் காவல் நிலைத்தில் மரணம் போன்ற சம்பவங்கள் நடக்கின்றன இதற்கு அரசு முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது காவல் துறையை மேம்படுத்த மூன்றாவது போலீஸ் கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது காவல்துறை  முழுமையாக  முதல்வரின் முழு கட்டுப்பாட்டில்  செயல்படுகிறது எனவே சில சம்பவங்களை வைத்து முதல்வரை குற்றம் சாட்ட முடியாது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியின் போதுதான் கொடநாடு சம்பவங்கள் நடைபெற்றன.
எனவே அவருக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச தகுதி இல்லை திமுகவின் தேர்தல் ஜனநாயக ரீதியானது அதிமுக பற்றி சொல்ல வேண்டியதில்லை அது மக்களுக்கே தெரியும் அதிமுக ஆட்சியின் போது அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கினார்கள் ஆனால் திமுக ஆட்சியில் அரசின் சார்பில் மின் உற்பத்தி அதிகரிக்கும் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன குறைந்த விலையில் வெளி மார்க்கெட்டில் மின்சாரம் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவே மின் தடை போன்ற பிரச்சினைகள் தற்காலிகமானவை இவ்வாறு அவர் கூறினார் ,ஈரோடு மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியம் சென்னிமலை ஒன்றிய செயலாளர் செங்கோட்டையன் குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம்  உட்பட பலர் உடனிருந்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *