ஈரோடு பாஜக கமலாலயத்தில் மகளிர் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் கமலாலயத்தில் பாஜக மாநில மகளிர் அணி தலைவர் உமாரதிராஜன் தலைமையில் புதியதாக பதவி ஏற்றுக்கொண்ட நிர்வாகிகள் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
சௌந்திரம், மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர் மோகனப்பிரியா மகளிர் அணி மாவட்ட தலைவர் புனிதம்ஐயப்பன் மாவட்ட பொதுச்செயலாளர் நிரஞ்சனா, மாவட்ட மகளிர் அணி பொருளாளர் சண்முகவடிவு மற்றும் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.செந்தில்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண் உறுப்பினர்கள் தங்களை பாரதிய ஜனதா கட்சியில் ஈரோடு தெற்கு மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளர் சண்முகப்பிரியா அவர்களின் ஏற்பாட்டில் இணைத்துக் கொண்டனர்.