இன்றைய ராசி பலன்கள்

Loading

மேஷம்

பணக் கவலையால் மனச்சஞ்சலம் அடைவீர்கள். தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டால் உங்களுக்குத்தான் கைக்காசு விரயமாகும். அடுத்தவரின் பேச்சைக் கேட்டு ஆசைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். சிக்கலில் மாட்டி சிரமப்படுவீர்கள். ஆழ்ந்து சிந்திக்காமல் புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். வேண்டா நட்புகளை விலக்கி விடுங்கள்.

ரிஷபம்

திட்டமிட்டுச் செயல்பட்டால் லாபத்தில் மிதக்கலாம். ரியல் எஸ்டேட், கெமிக்கல், கமிஷன் தொழில் போன்றவற்றில் அதிக வருமானம் பார்ப்பீர்கள். தம்பதிகளுக்குள் விட்டுக் கொடுத்துச் சென்றால் நன்மை அடைவீர்கள். சின்னச்சின்ன தடைகள் ஏற்பட்டாலும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வேலை காரணமாக வெளிநாட்டு பயணம் மேற்கொள்வீர்கள்.

மிதுனம்

நகைகள் வாங்க வேண்டும் என்ற பெண்களின் ஆசை நிறைவேறும். உறவினர் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயர்ந்து நிற்கும். தொழிலில் அபரிமிதமான லாபம் அதிகரிக்கும். உங்களுடைய பூர்வீக அசையாச் சொத்துக்கள் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே சிறப்பான புரிதல் உண்டாகி சந்தோஷம் நிலவும். உத்தியோகத்தில் உபரி வருமானம் பார்ப்பீர்கள்.

கடகம்

பங்குச்சந்தை வியாபாரம் படுஜோராக நடக்கும். வியூகம் அமைத்து வியாபாரிகள் வெற்றி பெறுவார்கள். சில்லரை வியாபாரிகள் நல்ல லாபம் பார்ப்பார்கள். உங்கள் ஆலோசனையால் நண்பரின் முக்கிய பிரச்சனை தீரும். ஏக்கத்தோடு இருந்த இரண்டு உள்ளங்களை இணைத்து வைப்பீர்கள். பண வரவுகளைப் பக்குவமாக வங்கி சேமிப்பில் போடுவீர்கள்.

சிம்மம்

நீங்கள் எதிர்பார்த்த வங்கி லோன் தாமதமாகக் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிகளை ஒத்தி வையுங்கள். வியாபாரம் மந்தமாக நடக்கும். ரியல் எஸ்டேட் தொழிலில் அதிக முதலீடு செய்ய வேண்டாம். அடுத்தவரின் பேச்சைக் கேட்டு அகலக் கால் வைக்காதீர்கள். இரவுப் பயணங்களில் எச்சரிக்கையாக இருங்கள். செலவுகள் கை மீறிப் போகும்.

கன்னி

வியாபாரப் போட்டிகளால் மனச்சோர்வு அடைவீர்கள். அரசு ஊழியர்கள் அதிக கவனமாக வேலை பார்க்கவேண்டும். ஆன்லைன் வர்த்தகங்கள் அனுகூலமாக நடக்காது. ஊழியர் பற்றாக்குறையால் உற்பத்தி குறையும்‌. கட்டுமானத் தொழில் சிரமத்தைக் கொடுக்கும். உங்களோடு வேற வேலை பார்ப்பவர் பொறாமையால் முதலாளியிடம் போட்டுக் கொடுப்பார். கவனம் தேவை.

துலாம்

ஏற்றுமதி இறக்குமதி தொழில் தடையில்லாமல் நடக்கும். வியாபாரிகள் மத்தியில் தனிச் செல்வாக்கு ஏற்படும். கமிஷன் தொழிலில் நல்ல லாபம் பார்ப்பீர்கள். நிலம் வாங்கி விற்கும் தொழில் உச்சத்தைத் தொடும். எதிர்காலத்திற்குத் தேவையான பணத்தைச் சேமிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். புதிய ஆர்டர்கள் நண்பர்கள் மூலம் கிடைக்கும்.

விருச்சிகம்

முதலீடுகள் பல மடங்கு உயரும். தொழிலில் அதிகப்படியான லாபம் பெறுவீர்கள். விவசாயம், கால்நடைகள் மூலம் ஆதாயம் அதிகரிக்கும். வீடு மனை ஆகியவற்றில் முதலீடு செய்வீர்கள். வங்கியில் இருந்த நகைகளைத் திருப்புவீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி பெண்களை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். மருத்துவச் செலவுகள் கணிசமாக குறையும்.

தனுசு

உங்கள் காலை வாரி விட எதிரிகள் காத்திருப்பார்கள். அன்பாகப் பேசி சிலர் கூட இருந்தே குழி பறிப்பார்கள். உயர் அதிகாரிகளின் மனம் அறிந்து நடந்து கொள்ளுங்கள். வேலை ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். குடும்பப் பிரச்சனைகளை அடுத்தவர் முன்னிலையில் பேசாதீர்கள். வீரியத்தை விலக்கி விட்டு காரியம் சாதிக்க பாருங்கள். எதிலும் வெற்றி கிட்டும்.

மகரம்

பெண் பிள்ளைகளின் நடவடிக்கையை உற்று கவனியுங்கள். குசுகுசுவென்று செல்போனில் பேசினால் கூர்ந்து பாருங்கள். தலைகுனிவை உண்டாக்கும் சம்பவங்கள் நடக்காமல் தடுக்கலாம். விடாப்பிடியாக வீட்டில் தர்க்கம் செய்யாதீர்கள். தேவை இல்லாத கெட்ட பழக்கங்களை பிள்ளைகள் நலனுக்காக விலக்கி விடுங்கள். அரசாங்கக் காரியங்களில் அலட்சியம் காட்டாதீர்கள்.

கும்பம்

நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உருவாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். தொழிலை விருத்தி செய்து மற்றவர்களைப் பொறாமைப்பட வைப்பீர்கள். சொந்த வீடு வாங்குவீர்கள்.

மீனம்

ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். அரசுப்பணியில் எதிர்பார்த்த இடமாறுதல் கிடைக்கும். சரியத் தொடங்கும் வியாபாரத்தைத் தூக்கி நிறுத்துவீர்கள். வெளியிடங்களில் வில்லங்கமாகப் பேசாதீர்கள். உறவுகள் உங்களுக்கு எதிரியாக மாறுவார்கள். அதை உதறித்தள்ளி விட்டு அடுத்த வேலையை பாருங்கள். பொருளாதாரம் உயரும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *