பாரதிய ஜனதா கட்சி வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக பாரத பிரதமர் நரேந்தர மோடியின் எட்டு ஆண்டுகால மகளிர்க்கான சிறப்பு திட்டங்களின் மாபெரும் விளக்க பேரணி

Loading

பாரதிய ஜனதா கட்சி வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக பாரத பிரதமர் நரேந்தர மோடியின் எட்டு ஆண்டுகால மகளிர்க்கான சிறப்பு திட்டங்களின் மாபெரும் விளக்க பேரணி சென்னை பழைய வண்ணாரப்பேட்டை காமாட்சி அம்மன் கோவில் அருகே நடைபெற்றது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை காமாட்சியம்மன் கோவில் அருகே தொடங்கிய பேரணியில் வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் சங்கரி தலைமையில் பா.ஜ.க வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணியினர் பெருமலவில் திரண்டு பாரத பிரதமரின் எட்டு ஆண்டுகால மகளிர்க்கான திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு கொடுத்து பேரணியாக வலம் வந்தனர்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க விளையாட்டுதுறை தலைவர் மணிகண்டன் வருகைதந்து சிறப்புறையாற்றி மகளிர்கான காப்பீடு திட்டங்கள்,அடையாள அட்டைகள் வழங்கி சிறப்பித்தார்.
இதில் மாவட்ட பொதுசெயலாளர் வன்னியராஜன் முன்னிலைவகித்தும்,மகளிர் அணி பொதுசெயலாளர் முத்துசெல்வி,யோகேஸ்வரி,மாவட்ட துனை தலைவி வசந்தி துர்கையா,மாவட்ட செயலாளர் ஷோபனா,மாவட்ட பொருளாலர் சுஜாதா,ராயபுரம் மத்திய மண்டல் தலைவர் ரூப்சந்தர்,துனை தலைவர் ரபியா மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் பலர் மாபெரும் பேரணியில் கலந்துகொண்டனர்.
0Shares

Leave a Reply