முதல்வர், கவர்னரிடம் அன்புமணி வாழ்த்து
பாமக தலைவராக அன்புமணி அண்மையில் அக்கட்சியின் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டார், இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித்துணைத்தலைவர் ஓ.பி.எஸ் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதைத்தொடர்ந்து நேற்று சென்னை கிண்டி ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து வாழ்த்து பெற்றார், சமீபத்தில் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற அன்புமணி, கவர்னர் ரவியையும் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது