இன்றைய ராசி பலன்கள்

Loading

மேஷம்

செலவுக்குத் தகுந்த வருமானம் வரும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல் வியாபாரம் அமோகமாக நடக்கும். ஆண் பெண் பழக்கங்களில் எல்லை மீறாமல் இருப்பது நல்லது. உங்கள் ரசனைக்கேற்ப வீட்டை மாற்றி அமைப்பீர்கள். நல்ல காரியத்திற்காக அதிகம் செலவு செய்வீர்கள். தகுதிக் குறைவானவருடன் பழக்கம் வைக்காதீர்கள்.

ரிஷபம்

கணக்கு வழக்குகளில் கவனக்குறைவால் நஷ்டம் ஏற்படலாம். புதிய தொழிலில் மிகுந்த நிதானமாக ஈடுபடுங்கள். ரியல் எஸ்டேட் கெமிக்கல் கமிஷன் போன்ற வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத மருத்துவச் செலவு வரலாம். தேவையற்ற ஆசைகளை மனதில் தேக்கி அவமானத்தைச் சந்திக்காதீர்கள். பணத்தைப் பத்திரமாக வைத்திருங்கள்.

மிதுனம்

ஆடம்பரச் செலவுகள் அதிகமாகும். அதனால் கை நீட்டி கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும். தவணைத் தொகையைத் தவறாமல் கட்டி விடுங்கள். நிலம் வாங்கி விற்பது நிலையில்லாமல் இருக்கும். பந்தயங்களில் ஈடுபடவேண்டாம். கையில் இருக்கும் பணம் கண்ணுக்குத் தெரியாமல் கரைந்து போகும். சிக்கனம் தேவை.

கடகம்

தொழில் முன்னேற்றம் அடைந்து எதிர்பாராத வருமானம் கிடைக்கும். அதைச் சேமிப்பாக மாற்றுவீர்கள். வீட்டு மனை வாங்கும் ஆசையை நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் விலகி குடும்பத்தில் குதூகலம் நிலவும். உடல் ஆரோக்கியம் மேம்பாடு அடையும். பணியிடங்களில் அழுத்தம் குறையும். மன அமைதி உண்டாகும்.

சிம்மம்

புதிதாக பொன் நகைகள் வாங்குவீர்கள். கமிஷன் வியாபாரத்தில் கிடைக்கும் வருமானம் உங்களை ஆச்சரியப்பட வைக்கும். நெருக்கடியான கடன்களை அடைத்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யும் அளவுக்கு நிலையை வளர்த்துக் கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த இழுபறி நிலை முடிவுக்கு வரும். தொட்டது துலங்கும்.

கன்னி

எத்தனை கடுமையான நெருக்கடி வந்தாலும் உங்கள் மென்மையான நடவடிக்கையால் சமாளிப்பீர்கள்.மங்கள நிகழ்ச்சிகளுக்காக பணம் ஒதுக்குவீர்கள். தாய் தந்தை ஆசைப்பட்ட பொருளை வாங்கிக் கொடுப்பீர்கள். வெளியூர்ப் பயணங்களால் நல்ல ஆதாயம் அடைவீர்கள்.மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் உயர்வான நிலைக்குச் செல்வார்கள்.

துலாம்

வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இப்போது வேண்டாம். பைனான்ஸ் தொழில் செய்பவர்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும். கமிஷன் வியாபாரம் பிரச்சனையைத் தரலாம். ஆன்லைன் சூதாட்டங்களை அறவே ஒதுக்கி விடுங்கள். கடுமையான முயற்சிக்குப் பிறகு வெளியூர் பயணங்களில் வெற்றி கிடைக்கும். சந்திராஷ்டம நாள். எச்சரிக்கை தேவை.

விருச்சிகம்

சொந்தங்களுக்குள் திருமணப் பேச்சுவார்த்தை நடக்கும். அது வெற்றிகரமாக முடியும். மேல்படிப்புக்காக பிள்ளைகள் வெளியூர் செல்வார்கள். குடும்பத்தின் தேவை அறிந்து நடந்து கொள்வீர்கள். உறவுகளில் இருந்த மனக்கசப்பைப் போக்குவீர்கள். வீட்டை அலங்காரப்படுத்தும் வேலையைச் செய்வீர்கள். இல்லறத்தை இனிமையாக்கப் பாடுபடுவீர்கள்

தனுசு

அனுபவம்மிக்கவரின் ஆலோசனையை மதித்து நடங்கள். தொழில் போட்டிகளை துடைத்து எறிவீர்கள். கையில் காசு தங்குவது சற்று கடினம்தான். நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதில் எச்சரிக்கை தேவை. அலுவலகப் பணியில் அலைச்சல் அதிகமாகும். வெளியூர்ப் பயணங்களில் உணவு ஒத்துக்கொள்ளாமல் உடல் உபாதை உண்டாகும். கண்ட உணவைச் சாப்பிடாதீர்கள்.

மகரம்

பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்திப்பீர்கள். குடும்பத்திலும் வெளி வட்டாரங்களில் இருந்த சங்கடங்கள் நீங்கும். கவனக்குறைவால் சிறு விபத்துகள் ஏற்படலாம். வெளிநாட்டுக்குச் சென்றிருந்த குடும்பத்தினர் வீட்டிற்கு வருவார்கள். பல வழிகளில் பண வரவு கிடைக்கும். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்திற்குத் தேவையானவற்றை ஒவ்வொன்றாகச் சேர்ப்பீர்கள்.

கும்பம்

முரட்டுத்தனமான பிடிவாதத்தை மூட்டை கட்டி வையுங்கள். விட்டுக்கொடுத்துப் போய் வெற்றி காணுங்கள். திருமண வயதில் உள்ளவர்களுக்கு விவாகப் பிராப்தம் ஏற்படும். குழந்தைப் பாக்கியத்திற்கு ஏங்கியவர்கள் வீட்டில் மழலைச் செல்வம் தவழும். மாணவர்களின் பட்டப்படிப்பு குறித்த எதிர்பார்ப்பு நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மீனம்

வேலை காரணமாக குடும்பத்தைப் பிரிந்து செல்வீர்கள். பழைய வாகனங்களை விற்று புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். பணி இடத்தில் இருந்த சிக்கலைத் தீர்ப்பீர்கள். கூட்டுத் தொழில் சிறப்பாக நடக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்ப்பீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் மேம்பாடு காணும். ஐடி ஊழியர்கள் அதிக வருமானம் பெறுவார்கள்.

0Shares

Leave a Reply