இன்றைய ராசி பலன்கள்

Loading

மேஷம்

புதிய பொறுப்புகளை திட்டமிட்டு குழப்பமில்லாமல் ஏற்றுக்கொள்ளுங்கள். பணியிடங்களில் உங்களுக்குப் பாராட்டும் பதவி உயர்வும் கிடைக்கும். அரசு ஊழியர்கள் அனுகூலமான பலனைப் பெறுவார்கள். குடும்பத்தில் சீரான நன்மைகள் தொடர்ந்து நடக்கும். வியாபாரத்தில் இருந்த இடர்பாடுகள் விலகிப்போகும். குடும்பத்தில் திருமணத் தடைகள் நீங்கி நல்ல வழி பிறக்கும்.

ரிஷபம்

வீட்டில் உங்கள் பேச்சுக்கு மரியாதை கொஞ்சம் குறைவுதான். ஆவேசமான வார்த்தைகளை விடாதீர்கள். மறைமுகமாக உங்களை மட்டம் தட்டி தொழிலைக் கெடுக்க முயற்சி செய்வார்கள். புத்திசாலித்தனமாக பிழைத்துக் கொள்ளுங்கள். வியாபாரம் சற்று மந்தமாக இருந்தாலும் லாபம் கிடைக்கும். வலியச் சென்று தேவை இல்லாத சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.

மிதுனம்

தேடிப் போனவர்களின் வீடு பூட்டியிருக்கும். இந்த ஏமாற்றத்தைத் தவிர்க்க இயலாது. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முயற்சி செய்யாதீர்கள். வெளிநாட்டிலிருந்து வரவேண்டிய உதவி சற்று தாமதப்படும். அரசாங்க வேலைகள் சுணக்கமாகவே நடக்கும். விபரமாகப் பேசுவதாக எண்ணி அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். மருத்துவச் செலவு வரலாம்.

கடகம்

திட்டமிட்டு செயல்படும் உங்கள் திறமையை அனைவரும் உணர்ந்து கொள்வார்கள். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனையால் தொழிலை மேம்படுத்துவீர்கள். உயர் அதிகாரிகளுக்கும் உங்களுக்கும் இடையே இருந்த விரிசல் விலகும். சுணங்கிக் கிடந்த வீட்டு வேலைகள் சுறுசுறுப்பாக நடக்கும். சுபகாரியங்களில் இருந்த தடைகள் நீங்கும்.

சிம்மம்

பணியிடத்தில் இருந்த எதிர்ப்புகள் மறைந்து போகும். வியாபாரம் சீராக நடக்கும். ஆன்லைன் வர்த்தகங்கள் நல்ல லாபத்தைக் கொடுக்கும். பங்குச் சந்தை முதலீடுகள் பயன்தரும். ஏற்றுமதி இறக்குமதி சுமுகமாக நடக்கும். சிறு வியாபாரிகள் கணிசமான லாபம் பெறுவார்கள். கல்வித்துறை ஊழியர்கள் கடின உழைப்பால் வெற்றி பெறுவார்கள். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு உயரும்.

கன்னி

நட்புகளுக்காக உறவுகளை பகைத்துக்கொள்ள வேண்டாம். பண வரவு சீராக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக நண்பர்களின் உதவியை நாடுவீர்கள். வர்த்தகக் கடன் வாங்குவீர்கள். ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போடும்போது கவனம் தேவை. வியாபாரம் சம்பந்தமாக வெளிநாடு செல்வீர்கள். தொழில் வரியை முறையாக செலுத்துவது நல்லது.

துலாம்

வேண்டாத வாக்குவாதங்களைத் தவிர்த்தால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். மேலிடத்துக்கு எதிராக பேச வேண்டாம். பண விஷயங்களைக் கையாளும்போது எச்சரிக்கை தேவை. பணியிடத்தில் உள்ள பைல்களை பத்திரமாக வைத்திருங்கள். வீண் சம்பத்திற்காக செலவு செய்யாதீர்கள். உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். சந்திராஷ்டம நாள். எச்சரிக்கை தேவை. “போனால் போகட்டும் போடா” என்ற விரக்தி நிலையில் இருப்பீர்கள். ஏதோ ஒருவகையில் வியாபாரத்திற்கு இடையூறு ஏற்படும். வாகனங்கள் பழுதாகி சிரமப்படுத்தும். நம்பிச் சொன்னவர்கள் இல்லை என்று கை விரிப்பார்கள். குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைக்கும் கிறுக்குத்தனத்தைச் செய்யாதீர்கள். தேவையில்லாத செலவுகள் கைமீறி போகும்.

விருச்சிகம்

இல்லத்தில் இதுவரை இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறும். சுபகாரியங்கள் தொடர்ச்சியாக வரும். குலதெய்வ வழிபாட்டை நிறைவேற்றுவீர்கள். பணப்பற்றாக்குறை மாறி பை நிரம்பி வழியும். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி இருக்கும். பரம்பரை வியாபாரத்தில் நல்ல பலனைப் பார்ப்பீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்த ஒப்பந்தச் சிக்கல் நீங்கும். கடன் சுமை குறையும்.

தனுசு

எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தை விலக்கி விடுங்கள். அரசாங்கத் தேர்வு எழுதும் போது நிதானம் தேவை. உங்கள் திறமைக்கு உரிய மதிப்பு கிடைக்கும். மறைமுகமாக இருந்த எதிர்ப்புகள் விலகிப் போகும். வேலை இடங்களில் சோம்பலாக இருக்கக் கூடாது. அலைச்சலுக்குத் தகுந்த வருமானம் பார்ப்பீர்கள். அரசு ஊழியர்கள் சட்டமீறல் செய்யாதீர்கள். வங்கிக் கடனை முறையாகச் செலுத்துங்கள்.

மகரம்

முழுமையாக முயற்சி செய்தால் தடையில்லாமல் முன்னேறலாம். வறண்ட பாலைவனமாக இருந்த இல்லறம் வசந்தம் வீசும் சோலையாக மாறும். ஆன்லைன் வர்த்தகங்கள் அமோக லாபத்தைத் தரும். கட்டுமானத் தொழில் சுறுசுறுப்பாக நடக்கும். கமிஷன் வியாபாரம் கைநிறையப் பணவரவைக் கொண்டுவரும். நிலம் வாங்கி விற்பதன் மூலம் நிலையான சேமிப்பு உண்டாகும். “கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியல” குடும்பச் செலவுகள் கட்டு மீறிப் போகும். சகோதர சகோதரிகளுக்கு பண உதவி செய்வீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்க ஆசைப்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். போட்ட முதலீட்டுக்கு தகுந்த லாபம் கிடைக்கும். ஊழியர்கள் உற்சாகமாக வேலை பார்ப்பார்கள். பணியிட மாறுதல் ஏற்படும்

கும்பம்

அலுவலகத்தில் அவஸ்தை குறைந்து அனுகூலக் காற்று வீசும். சிலரால் ஏற்படுத்தப்பட்ட மனக்கசப்பு மறையும். அரசு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, இடமாற்றம் உண்டாகும். ஊழியர்கள் முதலாளியின் பாராட்டைப் பெறுவார்கள். புதிய ஆர்டர்கள் வியாபாரத்தை விருத்தி செய்யும். உணவுப் பொருள் விற்பனை அமோகமாக நடக்கும். சேமிப்பு உயரும். “சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க”என்று உறவுகளை ஒன்றிணைக்க முயற்சி செய்வீர்கள். கடுமையாக உழைத்து கடனை அடைப்பீர்கள். அலுப்பின்றி வேலை பார்த்தால் முதலாளிகள் சந்தோஷம் அடைவார்கள். கிம்பளம் எதிர்பார்க்காமல் அரசு ஊழியர்கள் கடமையாற்ற வேண்டும். ஐடி ஊழியர்களுக்கு வேலையிடம் ஒரு போர்களமாகக் காட்சிதரும்.

மீனம்

வறட்டுக் கவுரவம் பார்த்து வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். சுபகாரியத் தடை விலகி சுபிட்சம் சேரும். பூர்வீகச் சொத்து வழக்கில் வீண் பிடிவாதம் வேண்டாம். மனதிலிருந்த இனம் தெரியாத பயம் விலகும். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். மூன்றாம் நபரை நம்பி புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். வங்கிக் கடன்களை முறையாகச் செலுத்தி விடுங்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *