ராணிபேட்டை மாவட்ட நிருபர் கி.ரவிச்சந்திரன்

Loading

சர்வதேச உரிமைகள் கழகம் கிழக்கு மண்டலம் அலுவலக திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை நிலைய செயலாளர் சிவஞானம் தலைமை தாங்கினார். மாநில இணைப் பொதுச் செயலாளர் (கிழக்கு) சிட்டிபாபு முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் (கிழக்கு) பிரேம்குமார் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக சர்வதேச உரிமைகள் கழகத்தின் மாநில தலைவரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான டி.கே. அசோக் குமார் அவர்கள் கலந்து கொண்டு அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறப்பித்தார். இதில் மனித உரிமைகள் கழக (அரசியல் கட்சி) மாநில மாணவர் அணி செயலாளர் சிவகுமார், மாநில மகளிர் அணி செயலாளர் வித்யாமணி, தலைமை கழக செயற்குழு உறுப்பினர் குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர். இறுதியில் மாநில ஒருங்கிணைப்பாளர் கிழக்கு விஜய் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *