ஒட்டன்சத்திரத்தில் நகர கட்டமைப்பு பணிகளை பார்வையிட்டார் நகராட்சி நிர்வாக ஆணையர் பா. பொன்னையா
ஒட்டன்சத்திரம் மே
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட சின்ன குளம், பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட், காப்பிலியபட்டி குப்பை கொட்டும் உரக்கிடங்கு உள்ளிட்ட பகுதிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் திரு. பொன்னையா இ.ஆ.ப. பார்வையிட்டார்.
மேலும் இந்நிகழ்வின் போது காந்தி மார்க்கெட் கட்டமைப்பில் உள்ள வசதிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்த வழிமுறைகள் பற்றி ஆராய்ந்தார். பின்பு சின்ன குளம் குறித்து ஆய்வு செய்தும் குளத்தை சுற்றிலும் பென்சீன் போட்டு பராமரிப்பு பூங்கா போல் பராமரிக்க ஆலோசனை கூறப்பட்டது. பின்பு புதிதாக காந்தி மார்க்கெட் அமையும் இடங்களில் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். அதற்குப் பின்பு காப்பலியபட்டியில் உள்ள குப்பை கொட்டும் உரக்கிடங்கில் குப்பைகளை சேகரித்து திடக்கழிவு மேலாண்மை செய்வதற்கான கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சரவணன் மதுரை, நகராட்சி மண்டல செயற்பொறியாளர் முருகேசன் மதுரை, மற்றும் ஒட்டன்சத்திரம் நகர்மன்ற தலைவர் திருமலைசாமி, நகர்மன்றத் துணைத் தலைவர் பா.வெள்ளைச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாண்டியராஜன், நகராட்சி வார்டு உறுப்பினர்கள், நகராட்சி ஆணையாளர் தேவிகா, நகராட்சி பொறியாளர் பன்னீர்செல்வம், ஒட்டன்சத்திரம் சுகாதார ஆய்வாளர் ரவிசங்கர், ஒட்டன்சத்திரம் நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன், ஒட்டன்சத்திரம் நகராட்சி மேலாளர் உமா காந்தி, கார்த்தி, முகமது ஆசிப், மற்றும் தலைமை எழுத்தர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.