1050 கோடி ரூபாயை டிபிஜி க்ரோத் மற்றும் டெமாசெக் நிறுவனங்களிலிருந்து முதலீட்டு நிதியாகத் திரட்டியிருக்கும் டாக்டர் அகர்வால் ஹெல்த்கேர் லிமிடெட்
1050 கோடி ரூபாயை டிபிஜி க்ரோத் மற்றும் டெமாசெக் நிறுவனங்களிலிருந்து முதலீட்டு நிதியாகத் திரட்டியிருக்கும் டாக்டர் அகர்வால் ஹெல்த்கேர் லிமிடெட்
கண் மருத்துவத்துறையில் இந்தியாவின் மிகப்பெரிய நிதி திரட்டல் செயல்பாடாக இந்த முதலீட்டுச்சுற்று அமைந்திருக்கிறது.
அடுத்த 3-4 ஆண்டுகளில் 105 மருத்துவமனைகளாக இருக்கும் தனது வலையமைப்பை இரட்டிப்பாக்கி 200 மருத்துவமனைகளாக உயர்த்த இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர், புரொபஸர், டாக்டர். அமர் அகர்வால் இது குறித்து கூறியதாவது : ‘‘கடந்த 6 ஆண்டுகள் காலஅளவில் எமது முதலீட்டாளரான ADV பார்ட்னர்ஸ் உடன் எங்களது பயணம் மிகச்சிறப்பானதாக இருந்தது. டிபிஜி க்ரோத் மற்றும் டெமாசெக் நிறுவனங்களோடு இணைந்து செயல்படுவதில் நாங்கள் பெரும் உற்சாகம் கொண்டிருக்கிறோம்; எமது நிறுவனத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சியை இதன்மூலம் ஆர்வத்தோடு எதிர்நோக்குகிறோம். உலகளவில் புகழ்பெற்ற இத்தகைய பிரபல முதலீட்டாளர்களிடமிருந்து கிடைத்திருக்கும் ஆதரவு, மக்களுக்கு தரமான கண் பராமரிப்பு சிகிச்சையை வழங்க வேண்டுமென்ற எமது குறிக்கோளையும் செயல்பாட்டையும் மேலும் வலுப்படுத்துகிறது; இந்நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கும் மேம்பட்ட தொழில்நுட்பம் அடிப்படையிலான மருத்துவ சிகிச்சையை எடுத்துச்செல்ல இது உதவும். என்றார்..