இந்தியன் முய்தாய் அமைப்பு சார்பாக சர்வேதேச அளவில் நடைபெற்ற 2022ற்கான 8வது இண்டோ நேபால் முய்தாய் சேம்பியன்சிப்கான போட்டிகள் நேபால் மாநிலத்தில் உள்ள தேசிய வணிக வர்த்தகமான கலங்கி இடத்தில் நடைபெற்றது

Loading

இந்தியன் முய்தாய் அமைப்பு சார்பாக சர்வேதேச அளவில் நடைபெற்ற 2022ற்கான 8வது இண்டோ நேபால் முய்தாய் சேம்பியன்சிப்கான போட்டிகள் நேபால் மாநிலத்தில் உள்ள தேசிய வணிக வர்த்தகமான கலங்கி இடத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு,கர்நாடகா,மகாராஷ்டிரா,அசாம்,மத்திய பிரதேசம்,ஆந்திர பிரதேசம்,மேகாலயா,பாண்டிசேரி,அந்தமான்சிக்கிம் ஆகிய 10 மாநிலங்களில் இருந்து வீரா் வீராங்கனைகள் இண்டோ நேபால் முய்தாய் சேம்பியன்சிப்கான போட்டிகளில் பங்குபெற்றன.போட்டியில் பங்குகொண்ட தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் 10தங்க பதக்கமும்16வெள்ளி பதக்கமும் வென்று தமிகத்திற்க்கு பெறுமைசேர்த்தனர்.
போட்டிகளில் வெற்றிபெற்று தமிழகம் திரும்பிய மாணவர்களை  பாராட்டும் விதமாக சென்னை நுங்கபாக்கத்தில் பிரபல கைகோ டயாபடிக் அரிசி நிருவனம் வளாகத்தில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
பாராட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக புதுகை வரலாறு நாளிதழ் சென்னை பதிப்பு தலைமை ஆசிரியர் காதர் உசேன்,சென்னை பெரம்பூர் பெண்கள் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் செல்வகுமாரி,சென்னை மாவட்ட சேர்மேன் சீதாலக்ஸ்மி சுதாகர் ராஜு,கைகோ லோஜி ஐ ரைஸ் நிருவனம் ஆதரவுடன்,வூசு அசோசியேசன் சென்னை மாவட்ட  செயலாளர் விசாகபதி, இந்தியன் முய்தாய் அமைப்பு தலைவர் லோகேஷ்,இணை செயலாளர் நவீன்,பொதுச் செயலாளர் பிரியா,
துணைத் தலைவர் கரன்,தென் தேசிய துணைத் தலைவர் உமா மகேஸ்வரி,குழு மேலாளர் கோபி,மோகன்.
கிரிஜா.
விஜயபத்மா ஆகியோர் கலந்துகொண்டு வெற்றிபெற்ற  வீரா் வீராங்கனைகளை கெளரவித்து பதங்கங்களும் சான்றிதல்கள் வழங்கி பாராட்டினர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *