தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த சட்டபேரவையில் அதிமுக வலியுறுத்தல்
சென்னை , மே- 6
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று சட்டபேரவையில் அதிமுக வலியுறுத்தியுள்ளது
தமிழக சட்டபேரவையில் போக்குவரத்துத்துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் அதிமுக உறுப்பினர் கந்தசாமி பேசுகையில் போக்குவரத்துத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத்தொகை வழங்க வேண்டும், என்றும் தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு நெருக்கடிகளை வழங்கக்கூடாது என்றும் கொரோனா காலக்கட்டத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் தமிழகத்தில் சாலை விபத்துக்கள் அதிகரிக்கவும் மாணவர்களிடையே கலாசாரம் சீர்கேடடையவும் மது ஒரு காரணமாக இருக்கிறது, எனவே பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்,பாமக உறுப்பினர் அருள் பேசுகையில் தனது தொகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு செல்ல வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாலையமைக்க சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து தான் நிதி ஒதுக்கி விட்டதாகவும் உடனடியாக அந்த சாலையை அமைத்து தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார், திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவகாம சுந்தரி பேசுகையில் தனது தொகுதியில் உள்ள தரங்கம்பட்டியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்றும் அங்கு உழவர் சந்தை மற்றும் பேருந்து நிலையங்களை அமைத்து தரவேண்டும் என்றும் தாந்தோணி வரை உள்ள அமராவதி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டித்தரவேண்டும் சமத்துவபுரங்கள் அனைத்திலும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் எல்லா சமத்துவபுரங்களிலும் கலைஞரின் சிலையை உருவாக்கித்தரவேண்டும் என்றும் வலியுறுத்தினார்,