வெராண்டா ரேஸ்ல் பயின்று, வங்கி, மத்திய, மாநில அரசுப்பணி தேர்வுகளில் வெற்றி பெற்ற ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு பாராட்டு!!
வேலை வாய்ப்புகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்யும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான வெராண்டா ரேஸ் வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்த நிறுவனம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக வங்கி, மத்திய, மாநில அரசுப்பணி தேர்வுகளில் வெற்றி பெற்ற ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களை பாராட்டுவதற்காக ஒருங்கிணைப்பு செய்துள்ளது. வெராண்டா ரேஸ் நிறுவனம் ஆன் லைன் வாயிலாகவும், நேரடியாகவும் மிகவும் நிபுணத்துவமிக்க பயிற்சிகளை அளித்து வருகிறது.
வெராண்டா ரேஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான 10-வது ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சியின் போது, வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் மற்றும் தலைவர், கல்பாத்தி எஸ். சுரேஷ், வெராண்டா ரேஸ் நிறுவனர் பரத் சீமான், வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்துதல் அதிகாரி, பிரவீன் மேனோன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தனர்.
தற்போது, தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள வெராண்டா ரேஸ் நிறுவனத்தின் 29 கிளைகளில், 18 வயது தொடங்கி 30 வயது வரையிலான சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். பல்வேறு அரசு பொதுத்துறை பணிகளுக்கான தேர்வுகளுக்கு தயாராவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெராண்டா ரேஸ் நிறுவனத்தில் தங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த சந்திப்பில், வெராண்டா ரேஸ் நிறுவனர் பரத் சீமான் பேசுகையில், “பல்வேறு அரசுப் பணி மற்றும் வங்கி, மத்திய மாநில போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தற்போது வெற்றிகரமாக தங்களது வாழ்க்கையை நோக்கி செல்லும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை வாழ்த்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்தாண்டு 40 ஆயிரம் பேர் கொண்ட வலுவான வெராண்டா ரேஸ் குடும்பத்தில் புதிய மாணவர்கள் இணைகின்றனர். மாணவர்களின் வாழ்க்கை பாதை தொடங்குகிறது என்பதால், அவர்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவதை உறுதி செய்யும் விதமாக, கற்றல் பயணத்தை தொடர, எங்கள் திறமையான பயிற்சியாளர்களும் ஊழியர்களும் பெருந்தொற்று பரவலுக்கு மத்தியிலும் மிகவும் கடுமையாக உழைத்தனர்” என்றார்.