தனியார் மருத்துவமனை அலட்சிய சிகிச்சையால் இறந்தவரின் சமூகத்தினர் மருத்துவமனை முற்றுகை !

Loading

ஈரோடு ஏப்  26
தனியார் மருத்துவமனையின் அலட்சியப்போக்கு காரணமாக தனது மனைவி இறந்ததால்
பாதிக்கப்பட்டவர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 ஈரோடு சுதா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தவறான சிகிச்சையே மனைவி இறக்க காரணம் தனது மனைவிக்கு அலட்சிய சிகிச்சை செய்து வேண்டுமென்றே கொன்றுவிட்டார்கள்..!
எனக்கூறி முதல் கட்ட போராட்டமாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர் அதன் தொடர்ச்சியாக நேற்று ஈரோடு சுதா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கலிங்கியம் பகுதியில் வசிக்கும் காயத்ரி வயது 35 இவரது கணவர் காந்தி ஒரே பெண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார் தனது மனைவி காயத்திரிக்கு ஏற்பட்டுள்ள சிறுநீரக செயல்பாடு குறைவாக இருந்ததால் கோபி டாக்டர் ஒருவர் பரிந்துரையின்படி டயாலிசிஸ் செய்வதற்காக சுதா மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் 25ஆம் தேதி சிகிச்சையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
காயத்திரிக்கு டயாலிசிஸ் செய்ய வந்தவர் முன்னெச்சரிக்கையாக முன்கூட்டியே தனக்கு ஏற்படும் பிரச்சனை குறித்து அதாவது ஏசி வேண்டாம் என வலியுறுத்தியும் மெத்தனமாக பணியாற்றிய மருத்துவமனை பணியாளர்கள் காயத்ரி மூச்சுத்திணறி இரக்க மூல காரணம் என தெரிந்ததால்  அவரது உறவினர்கள் மற்றும் காயத்திரியின் கணவர் காந்தி மற்றும் சுமார் 100க்கும் மேற்பட்ட நபர்கள் சுதா  மருத்துவமனையை மூட  சொல்லி கோஷங்களை எழுப்பி மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் நாடார் சங்கம் சார்பில் பங்கேற்ற வர்களும், காயத்திரியின் புகைப்படத்தை கையில் ஏந்தி நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், காயத்திரியின் கணவர் காந்தி தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் கேனை திடீரென எடுத்து தனது உடம்பில் ஊற்றிக்கொண்டு தீ வைக்க முற்பட்டார் காவல்துறையினர் தடுத்து குண்டுகட்டாக அவரை அப்புறப்படுத்தினர் சுமார் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் சுதா மருத்துவமனையை தாண்டி ரோட்டில் எந்த வாகனமும் செல்லாத அளவிற்கு முன்கூட்டியே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுப் பாதையில் வாகனங்களை திருப்பி அனுப்பினர் போலீசார்
தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி நீதி கேட்கும் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த சங்கத்தினருக்கும் பாதிக்கப்பட்ட காயத்திரியின் கணவர் கேட்கும் எந்தவித சட்டபூர்வமான மருத்துவமனையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை மருத்துவமனை நிர்வாகம் ஆதாரங்களை தகவல் உரிமை சட்டத்தின் வாயிலாக கேட்டும் மறுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது கொடுக்கப்பட்ட சிகிச்சையில் பலனின்றி இறந்தது உண்மையான தகவல் . ஆனால் பாதிக்கப்பட்டவரை ஏமாற்றும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் என்பது பாதிக்கப்பட்ட காந்தி தரும் வாக்குமூலத்தில் உள்ளதால் ஆர்ப்பாட்டக்காரர்கள் இது நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இன்று பாதிக்கப்பட்ட மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டம், நாளை சுதா மருத்துவமனை கிளைகள் அனைத்து பகுதியிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று கூறுகிறார்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள். எது எப்படியோ பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *