ராணிபேட்டை மாவட்டம் ஆற்காட்டில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு
ராணிபேட்டை மாவட்டம் ஆற்காட்டில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், பழக்கடைகள், மீன் மார்கெட், இறைச்சி கடைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். இதில் சுமார் 3 டன் எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்ற பட்டது. இதில் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், கிராம நிர்வாக அலுவலர் கபிலன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்.