“ஒருலட்சம் மின் இணைப்பு திட்டம்” பயனாளிகளுடன் முதல்வர் கலந்துரையாடல் நிகழ்ச்சி !

Loading

ஈரோடு ஏப்ரல் 18
காணொலிக் காட்சி வாயிலாக ஈரோடு மாவட்டத்தில் 9 இடங்களில் தமிழக முதல்வர் மின் இணைப்பு பெற்ற விவசாயிகளிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது
சென்னை, அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் “மின் னகம் ” மின் நுகர்வோர் சேவை மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து ,குறை தீர்க்கப்பட்ட பயனாளிகளிடம் விபரங்களை கேட்டறிந்த தமிழக முதல்வர் பிறகு காணொளி காட்சியில் மாவட்டம்தோறும்  மின் இணைப்பு பெற்ற பயனாளிகள் மற்றும் விவசாயிகளிடம் நடைபெற்ற காணொளி காட்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ,தமிழக மின்ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எரிசக்தி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா ஐஏஎஸ், தமிழக மின் பகிர்மான துறை தலைவர் மேலாண்மைத் துறை இயக்குனர் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் ,ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சி காணொளி காட்சியில் இடம் பெற்றது நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச் .கிருஷ்ணனுண்ணி ஐஏஎஸ் தலைமையில் ஒன்பது இடங்களில் தமிழக முதல்வர் காணொலி காட்சியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற்றது ஈரோடு ,சித்தோடு ஸ்ரீ கோகுல கிருஷ்ணா திருமண மண்டபம், சக்தி திருமன மண்டபம் பெருந்துறை, ஆர்.டி இன்டர்நேஷனல் ஸ்கூல் சாவடிப்பாளையம், நவரசம் கலை அறிவியல் கல்லூரி அறச்சலூர், கலந்தாய்வு கூடம், தலைமை பொறியாளர் அலுவலகம், ஈரோடு மண்டலம், ஈவி என் சாலை ஈரோடு , கோபி ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரி கோபிசெட்டிபாளையம், பவானி பாலிடெக்னிக் கல்லூரி பவானி ,ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரி சக்தி ,பெருமாள் சாமி கவுண்டர் ஆடிட்டோரியம் பன்னாரி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி அத்தாணி ஆகிய 9 இடங்களில் ஈரோடு மாவட்ட ஆட்சியர்  தலைமையில்  மின் இணைப்பு பெற்ற விவசாயிகளிடம் காணொளிக் காட்சிகள் வாயிலாக தமிழக முதல்வர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி ,ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் ,மேற்பார்வை பொறியாளர் (மின் பகிர்மானம்) இந்திராணி ,செயற்பொறியாளர் (நகரியம்) ராமச்சந்திரன் மற்றும் மாநகர மாமன்ற உறுப்பினர்கள், துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *