இன்றைய ராசி பலன்கள்

Loading

மேஷம்

இல்லத்தரசிகளின் சேமிப்பு தக்க சமயத்தில் பயன்தரும். மனக் கவலை நீங்க இறை வழிபாடு செய்யுங்கள்.வீண் தொல்லைகளில் மாட்டிக் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருங்கள். வியாபாரம் நல்ல நிலையில் நடக்கும். பொருளாதாரத்தில் ஓரளவு முன்னேற்றம் காணப்படும். ஒரு காரியத்தில் இறங்கு முன் இரண்டு முறை சிந்தியுங்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்

நீங்கள் நினைத்தது நிச்சயம் நடக்கும்.தொழில்துறைகளில் கணிசமான லாபத்தை காண்பீர்கள். வாகனம் வாங்கி விற்க நல்ல நாள். வழக்குகளில் ஏற்படும் திருப்பம் உங்களுக்கு சாதகமாக முடியும். வியாபாரிகள் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். போட்டி பந்தயங்களில் வெற்றி உங்கள் பக்கம் நிற்கும்.வெளியூர் பயணங்கள் எதிர்பார்த்த பலனை கொடுக்கும்.

மிதுனம்

விருந்து நிகழ்ச்சியில் கலந்து சுவையான உணவுகளை உண்பீர்கள். பெண்கள் நகை வாங்கி அழகு பார்ப்பார்கள். வேலை இடங்களில் நல்ல பெயர் கிடைக்கும். கணவன் மனைவி உறவில் சிக்கல் சிரமங்கள் விலகும். சிறு வியாபாரிகளுக்கு இது யோகமான நாள். கணினித்துறையில் சாதனை நிகழ்த்துவீர்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும்.

கடகம்

புகழும் கௌரவமும் போட்டி போட்டு உங்களை அழகுபடுத்தும். உங்கள் வார்த்தைக்கு வெளியிடங்களில் மரியாதை கூடும். வியாபாரம் விருத்தியடையும். தொழிற்சாலைகளில் உற்பத்தி அதிகரிக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு அனுகூலமான நன்மை ஏற்படும். அந்தஸ்தை காட்ட அதிகம் செலவு செய்வீர்கள். பணப்பற்றாக்குறை இருக்காது.

 

சிம்மம்

கண் காது போன்ற உறுப்புகளில் பிரச்சனை உண்டாகலாம்.செய்ய நினைக்கும் காரியத்திற்கு சின்னச்சின்ன இடையூறுகள் ஏற்படும். வழக்குகள் இழுபறியாக நடக்கும். வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். கையில் காசு தங்குவது கடினம். தொழில்துறையில் மந்தநிலை. வியாபாரத்தில் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. வெளியூர் பயணங்கள் அலைச்சலைத் தரும்.

கன்னி

வேலையில் கவனம் தேவை. மேலதிகாரிகளின் சீற்றத்திற்கு ஆளாகாதீர்கள். தொழிலாளர்கள் ஒத்துழைப்பு குறையும். வியாபாரத்தில் தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. விரயச் செலவுகள் அதிகமாகும். சிலர் கடன் வாங்கும் நிலை உருவாகும். போட்டி பந்தயங்களில் ஈடுபடவேண்டாம். மனைவியும் குழந்தைகளும் அனுசரணையாக நடப்பார்கள்.

துலாம்

எண்ணிய காரியங்கள் திண்ணமாக நடக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் காண்பீர்கள். வாக்கு வன்மையால் ரியல் எஸ்டேட் தொழிலில் லாபம் பார்ப்பீர்கள். கணினித்துறையில் உங்கள் திறமை வெளிப்படும். அரசுத்துறையில் வேலை செய்பவர்கள் பாராட்டப்படுவார்கள். பெரியோர்கள் நட்பு தொழில்துறைக்கு உறுதுணையாக இருக்கும். வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்

பங்குச் சந்தையில் நல்ல லாபம் பெறுவீர்கள். லாட்டரி போன்ற வகையில் திடீர் பண வரவு உண்டாகும். தொழில்கள் மேன்மையாக நடக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கான ஆயத்த ஏற்பாடுகள் தொடங்கும். நில விற்பனையில் லாபம் பெறுவீர்கள். மகிழ்ச்சிகரமாக பொழுதை கழிக்க தாராளமாக செலவு செய்வீர்கள். எதிர்பாராத பண வரவு பேருதவியாக அமையும்.

தனுசு

விரோதிகள் தொழிலை முடக்க பார்ப்பார்கள். அதில் மீண்டு வருவீர்கள். வயிற்றுக் கோளாறுகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். கவனமாக வேலை செய்து மேலதிகாரியின் பாராட்டைப் பெறுங்கள். வாக்கு சாதுரியத்தால் வியாபாரத்தில் லாபம் பார்ப்பீர்கள். அதிக செலவுகள் கையை பிசைய வைக்கும். பெயருக்கு இழுக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மகரம்

இன்று சந்திரன் உங்களுக்கு “எட்டா” இடத்தில் இருக்கிறார். பணவிரயம் பையை காலி செய்யும். நல்ல காரியங்களை நாளைக்கு ஒத்தி போடுங்கள். வீட்டில் சண்டை சச்சரவுகளில் இறங்காதீர்கள். கண்டிப்பு என்ற போர்வையில் பிள்ளைகளை கண்கலங்க வைக்காதீர்கள். சிக்கனமாக நடந்து கொள்ளுங்கள். வெளியூர் பயணங்கள் வெறும் அலைச்சலை மட்டுமே தரும்.

 

கும்பம்

நீங்கள் நினைக்கிறீர்கள். அது அப்படியே நடக்கிறது. கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பந்தயங்களில் வெற்றி உங்கள் பக்கம்தான். தொழில் துறையில் மிக முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வழக்குகளில் வெற்றி காண்பீர்கள். வெளியூர் பயணத்தில் வேண்டிய பலனைப் பெறுவீர்கள். பெரியோர்களின் பாராட்டு உங்களுக்கு ஊக்கமாக அமையும்.

மீனம்

ஆடல் பாடல்களில் விருப்பமாக பொழுதை போக்குவார்கள். புதிய நட்புகள் கிடைக்கும். வேலையில் நல்ல பெயர் பெறுவீர்கள். தொழில்துறைகள் ஏற்றத்துடன் காணப்படும். சிறுசிறு தொல்லைகள் வரும். மன உறுதியால் துன்பம் விலகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். அரசாங்க ஆதரவு கிட்டும். வியாபாரம் வெற்றிகரமாக நடக்கும். வீட்டில் நிம்மதி நிலவும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *