புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை
மதுரை அழகர் கோவில் ரோடு, இரணியம் கிராமம் மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட சுந்தரராஜன்பட்டி பகுதியில் உள்ளது அழகர் கார்டன். இப்பகுதியில் சுமார் 2000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதிக்கு புதிய தார் சாலை அமைத்து தர வேண்டி வணிகவரி மற்றும் பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்களிடம் நலச்சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் உத்தரவின் பேரில், மேலூர் திமுக மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டி தலைமையில் தார் சாலை அமைக்க பூமி பூஜை பணிகள் நடைபெற்றது. இதில் அழகர் கார்டன் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் சுப்பிரமணியன் என்ற மகேஷ் மற்றும் அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர்.