நாற்காலிகளில் ஆண்களை அமர விடாதீர் பெண்கவுன்சிலர்களுக்கு கனிமொழி மீண்டும் அட்வைஸ் 

Loading

உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள், தங்களுக்கான நாற்காலிகளில் ஆண்களை அமரவிடக்கூடாது என்று திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி அறிவுறுத்தியுள்ளார்

திமுக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம்சென்னை ராயபுரம் காளிங்கராயன் தெருவில்  நடந்தது. இக்கூட்டத்தில் திமுக மகளிர் அணி செயலாளரும் பாராளுமன்ற திமுக  துணைத் தலைவருமான கனிமொழி கலந்து கொண்டு பேசினார் அப்போது அவர் பேசுகையில் மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது ஆனால்  இந்தியாவிலேயே முதல் முறையாக.வேளாண்மைக்கு என தனி  பட்ஜெட் போட்ட ஒரே அரசு திமுக அரசுதான் .
திருமண நிதி உதவித் திட்டத்திற்கு பதிலாக பெண் கல்வி நிதி உதவி திட்டத்தை கொண்டு வந்தது திமுக அரசு மாதந்தோறும் பெண்கள்  படித்து முடிக்கும்வரை ஆயிரம் ரூபாய் வழங்கும் அற்புதமான திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்துள்ளது திமுக ஆட்சியில்  சாமானியர் வீட்டு பிள்ளைகளும் படிப்பதற்கு இடம் இருக்கிறது ஆனால் மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற புதிய கல்விக் கொள்கையில் சாமானியன் வீட்டுப் பிள்ளைகள் படிக்க முடியாது.
 அதிக உற்பத்தி செய்யும் மாநிலம் என்பதால் தமிழகத்துக்கு ஜிஎஸ்டி இழப்பீடு கிடைக்கப்போவதில்லை குஜராத்தை பாருங்கள் என்று அடிக்கடி பேசும் பிஜேபியினர் முதலில் அந்த 20 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டை  பெற்றுத் தந்து விட்டு குஜராத்தை பற்றி பேசுங்கள்.
நீட் தேர்வு காரணமாக தமிழர்களால் எம்பிபிஎஸ் படிக்க முடியவில்லை அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு  தமிழக அரசு போராடிப் பெற்றுத் தந்தது மத்திய அரசு நீதிமன்றத்தில் மூலமாக வழக்கு தொடுக்கிறது அந்த வழக்கில் இளநிலை பட்டப் படிப்புக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் ஆவணம் ஒன்றை தாக்கல் செய்திருந்தார்  பிஜேபி அரசுக்கு தெரியாமல்  இந்த ஆவணம் தாக்கல் செய்யப்பட்டிருக்குமா.7.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் போராடி வெற்றியை தேடி தந்தது திமுக அரசு
 உத்தரபிரதேசத்தில் ஆயிரம் பேருக்கு ஒரு டாக்டர்  தான் இருக்கிறார்.தமிழகத்தில் ஐம்பது பேருக்கு ஒரு டாக்டர் இருக்கிறார் இதுதான்  திராவிட மாடல் ஆட்சி . அதானியும் அம்பானியும் மட்டும் வளர்வது வளர்ச்சி அல்ல  வளர்ச்சி எல்லோருக்குமானதாகஇருக்க வேண்டும் அது தான் திராவிட  மாடல் ஆட்சி
மாநிலத்தின் உரிமையை விட்டுக் கொடுக்காமல் கட்சி பெற்ற ஒரு மாநிலம் தமிழகம் இது எப்படி சாத்தியம் என்று கேட்கிறார்கள் அதுதான் திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 50 விழுக்காடு பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது திராவிட மாடல் ஆட்சியின் மூலம் தான்  இருக்கிறது வெற்றி வாய்ப்பு கிடைத்திருக்கும் பெண்கள் நீங்கள் தான் அந்த அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் உங்கள் நாற்காலிகளில் நீங்கள் தான் உட்கார வேண்டும் அதில் ஆண்களை உட்கார வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது அது உங்களுடைய மகளுக்கும் பேரக் குழந்தைகளுக்கும் அடுத்த தலைமுறைக்கும் செய்கிற துரோகம் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆங்கிலத்தில் இடத்தில் இந்தி இருக்க வேண்டும் வேண்டும் என்று பேசுகிறார்.
ஆங்கிலம் வேண்டாம் என்று பிஜேபி பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் பேசுவார்களா ஆங்கிலம் இல்லாவிட்டால் வெளிநாடு சென்று படிக்க முடியுமா முன்பு கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஜெர்மன் மொழி  பாட திட்டமாக இருந்தது ஆனால் அந்த இடத்திற்கு இப்பொழுது இந்தி வந்துவிட்டது இந்தியும் சமஸ்கிருதமும் படித்தே ஆக வேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறார்கள் ஆங்கிலம் படித்தால் புதிய தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ளலாம் மருத்துவ இதழ்கள் எல்லாம் படிக்கலாம் இந்தி படித்தால் என்ன செய்ய முடியும் வட மாநிலங்களுக்கு மத்திய அரசு 13 ஆயிரம் கோடி அளவுக்கு நிதி ஒதுக்கீடு வழங்குகிறது தமிழகத்திற்கு நியாயமாகப் ஒதுக்க வேண்டிய நிதியை வழங்குவதில்லை இவ்வாறு அவர் பேசினார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *