வேலூர் உடல் ஊனமுற்றோருக்கு மிதிவண்டி சமூக ஆர்வலர் வழங்கினார்.
வேலூர் ஏப்ரல் 10
வேலூர் மாநகர் குட்டை மேடு பகுதியை சேர்ந்த பிரபு பிறந்தது முதலே போலியோவால் பாதிக்கப்பட்டு ஒரு கால் செயலிழந்த நிலையில் வறுமையில் தவித்து வருபவர்.தான் சுயமாக சமோசா விற்று தொழில் செய்ய உதவும் வகையில் மூன்று சக்கர மிதிவண்டி வேண்டும் என கேட்டார். எனவே அவருக்கு புதியதாக ஒரு மூன்று சக்கர மிதிவண்டி அன்பளிப்பாக சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் வழங்கினார்.தினமும் இந்த மிதிவண்டியில் கடைகளுக்கு சென்று சமோசா விற்க திட்டமிட்டுள்ளார்.