திருவொற்றியூர் தனியார் பள்ளியில்  மாணவர்களின் பகவத் கீதை பாராயணம்

Loading

திருவொற்றியூர்  ஸ்ரீசங்கரவித்யாகேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற பகவத் கீதை பாராயணணம் பள்ளிதாளாளர் ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது, 

சென்னை, ஏப்-10,

திருவொற்றியூர் ஸ்ரீசங்கரவித்யாகேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற பகவத் கீதை பாராயணம் நடைபெற்றது,

சமஸ்கிருத பாரதி சென்னை மற்றும் ஸ்ரீசங்கர வித்யாகேந்திர மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து பள்ளி வளாகத்தில் ஒரே நேரத்தில் 2ஆயிரம் மாணவ, மாணவியர் ஒன்று சேர்ந்து பகவத்கீதை பாராயணம் நிகழ்வு  பள்ளி தாளாளர் ஜெ. ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக நாகரத்தினம், கீதா ஆகியோர் பங்கேற்று  பேசுகையில் சமஸ்கிருதத்தை பத்து நாளில் தெளிவாக பேச கற்றுக்கொள்ளலாம் என்ற ஆர்வத்தை துாண்டினார்கள்.பள்ளி நிர்வாக இயக்குனர் அவந்திகா ஹரிகரன் பேசும்போது, தொன்மையான சமஸ்கிருத மொழியின் பெருமையை விரிவாக விளக்கினார்,

, விழாவில் அனைத்து மாணவமாணவியரின் பகவத்கீதை பாராயண உச்சரிப்பு ஓசை விண்ணை தொட்டது,ஒன்றாம் வகுப்பில் இருந்து

9 ஆம்  வகுப்பு வரை சமஸ்கிருதம் மூன்றாம் மொழியாக மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படும் என பள்ளி முதல்வர் சந்திரகலா  அறிவித்தார்.

சிறு வயதிலிருந்தே பள்ளி மாணவ, மாணவியருக்கு பகவத்கீதையையும் சமஸ்கிருதத்தையும் வளர்க்கும் நோக்கத்தை பள்ளி முதல்வர் மலர்விழி எடுத்துரைத்தார். வரும் கல்வியாண்டில் 11 ஆம் வகுப்பில்  சமஸ்கிருதம் விருப்ப மொழி பாடமாக செயல்படுத்தப்படும் என்று கூறினார்

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *