காணாமல் போன செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பல்வேறு மனுக்கள் பெறப்பட்டு அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் அவர்கள் உத்தரவிட்டார்.அந்த உத்தரவின் பெயரில் அவருடைய நேரடி மேற்பார்வையில் சைபர் கிரைம் போலீசார் காணாமல் போன செல்போன்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் 15 லட்சம் மதிப்புள்ள 111 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேற்படி செல்போன்களை கோட்டார் காவல் நிலையத்தில் வைத்து உரிய நபர்களிடம் காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.
செல்போன்களை வாங்க வந்தவர்களிடம் கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் பற்றியும் அவற்றை பயன்படுத்துபவர்கள் பற்றியும் இலவச வாட்ஸ்அப் எண் 7010363173 ல் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டு பேசுகையில் தகவல் தெரிவிப்பவர்கள் விவரம் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும், காவல் நிலையத்தில் வரும் புகார்களை நானே தினமும் மாலை பொதுமக்களிடம் போன் செய்து விசாரிப்பேன்.
எனவே காவலர்கள் யாரும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார். மேலும் கோட்டார் காவல்நிலையத்தின் வளாக பகுதியில் துணிகளால் பந்தல் அமைத்து பேனர்கள் வைத்து தொலைந்து போன செல்போன்களை வாங்க வந்த பொதுமக்களுக்கு டீ, காப்பி ,வடை வகைகளை கொடுத்து செல்போன்களை வழங்கினார். இந்த உபசரிப்பு செல்போன் தொலைக்கப்பட்டு வாங்க வந்தவர்களிடம் “காவலர்கள் உங்கள் நண்பன் “என்ற வார்த்தையை மனதில் நினைவூட்ட செய்து மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது..