அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி, அவர்கள் துவக்கி வைத்து, பார்வையிட்டார்
அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி, அவர்கள் துவக்கி வைத்து, பார்வையிட்டார்.
அரியலூர் மாவட்டம், அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டம் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி, அவர்கள் இன்று (08.04.2022) துவக்கி வைத்து, பார்வையிட்டார்.
அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி 9 முதல் 12ஆம் வகுப்பு வரை அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு 7 தலைப்புகளில் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தலைப்புகளிலும் வெற்றி பெறும் முதல் 3 மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.
உணவுப்பொருட்கள், உலகில் நம்மை சுற்றியுள்ள உயிரினங்கள், நகரும் பொருட்கள், வேலை செய்யும் பொருட்கள், இயற்கை தத்துவம் மற்றும் இயற்கை வளங்கள் ஆகிய 7 தலைப்புகளில் காட்சிப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் 86 பள்ளிகளிலிருந்து 286 மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு, தங்களின் தனித்திறமையில் ஆசிரியர்கள் உதவியுடன் உருவாக்கப்பட்ட 286 படைப்புகளை 16 அரங்குகளில் காட்சிக்கு வைத்துள்ளனர். இந்த அறிவியல் கண்காட்சியில் கலந்துகொண்டுள்ள அனைத்து மாணவ, மாணவிகளிடம் படைப்புகள் குறித்து தனித்தனியாக கேட்டறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பெ.ரமண சரஸ்வதி, இ.ஆ.ப., அவர்கள், மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.இராமன், மாவட்ட கல்வி அலுவலர்கள் மான்விழி, ஜோதிமணி, பேபி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.