இன்றைய ராசி பலன்கள்

Loading

மேஷம்

வேலை செய்யும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் தாமதமாகும்.நாணயத்தை காப்பாற்றுவது மிகவும் முக்கியம். அதனால் தலைகுனிவு ஏற்படலாம். சின்னச் சின்ன விபத்துகள் ஏற்படுத்த சந்திரன் முயற்சி செய்வார். அதற்கு இடம் கொடுக்காதீர்கள். இருப்பினும் உறவினர்களின் ஆதரவு உங்களுக்கு உண்டு.

ரிஷபம்

வீட்டிற்குள் விவாதமே செய்யக்கூடாது.கணவன் மனைவிக்கு இடையே சலசலப்புக்கு பஞ்சம் இருக்காது. சின்ன பாம்பாக இருந்தாலும் பெரிய கம்பெடுத்து அடிக்க வேண்டும். சின்ன நோயாக இருந்தாலும் மருத்துவரை பார்க்க தயங்கக்கூடாது. நண்பர்கள் கூட சிலருக்கு எதிரியாக மாறலாம். தொழில் துறைகள் சற்று சறுக்கலாகவே இருக்கும். பணி செய்யும் இடங்களில் கவனம் தேவை.

மிதுனம்

தொட்டது துலங்கி தொழில் மேன்மை அடையும் காலகட்டம் இது.உத்தியோகத்தில் உள்ளவர்கள் உற்சாகமாக வேலை பார்ப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு உங்களுக்கு ஊக்கம் கொடுக்கும். இன்று உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை ஈட்டித் தரும். போட்டி பந்தயங்களில் உங்கள் பக்கம் வெற்றி நிற்கும். சட்ட விரோத சூதாட்டங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பணம் கிடைக்கிறதே என்று தேவை இல்லாமல் கடன் வாங்காதீர்கள். குழந்தைகளின் குறும்பால் மனம் மகிழ்ச்சியில் திளைக்கும். பங்கு பரிவர்த்தனை வியாபாரத்தில் லாபம் கொழிக்கும்.வெளிநாடுகளிலிருந்து எதிர்பாராத உதவி உங்களை தேடி வரும். புதிய வாகனங்கள் வாங்க கூடிய யோகம் உள்ளது. சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்று நீங்கள் எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களால் நன்மை ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். மூத்த சகோதரரின் ஆதரவு கிடைக்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

கடகம்

இந்த நாள் உங்களுக்கு ஒரு இனிமையான நாள்.கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்துவேறுபாடு மறையும். வீட்டில் குதூகலம் தாண்டவமாடும். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பணியாளர்களின் உழைப்புக்கேற்ப மரியாதை பெறுவார்கள். சகோதர சகோதரிகள் உறவு மேம்படும். சிறு வியாபாரிகள் நல்ல லாபம் ஈட்டுவார்கள். ஆடை அணிமணிகள் வாங்கி பெண்கள் ஆனந்தம் அடைவார்கள்.

சிம்மம்

வாழ்வில் முன்னேற்றத்திற்கான வழித்தடங்கள் அத்தனையும் திறக்கப்படும். வீடு வாங்கலாம். நிலம் வாங்கலாம். கார் வாங்கலாம். கொடுத்த இடத்தில் கடன் திரும்பக் கிடைக்கும். புதிய தொழில்கள் தாராளமாக தொடங்கலாம். வெளியூர் பயணங்களுக்கு விதை போடுங்கள். அடுத்து வரும் நாட்களில் பயணங்கள் பயனுள்ளதாக அமையும். தந்தை தாய் வழி சொந்தங்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

கன்னி

இனந்தெரியாத எதிர்ப்புகள் உருவாகும். விரோதிகள் உங்களை வீழ்த்த நினைப்பார்கள். வேலை இடங்களில் கவனமாக பணியாற்றுங்கள். மேலதிகாரிகள் உங்கள் உழைப்பை அங்கீகரிப்பது அவ்வளவு சுலபமல்ல. பர்ஸ், நகைகள் போன்றவற்றை பத்திரமாக வையுங்கள். எவருக்கும் நகைகளை இரவல் கொடுக்க வேண்டாம். கெட்ட பெயர் எடுக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

துலாம்

புதிய தொழில் தொடங்க ஆசைப்படுகிறீர்களா. அதை கொஞ்சம் ஒத்தி வையுங்களேன். ஏனென்றால், இந்த நாள் உங்கள் காலை வாரி விட காத்திருக்கும். உடல் நலத்தில் அசட்டையாக இருக்காதீர்கள். மருத்துவச் செலவு மண்டை வலியை உண்டாக்கும். மனைவி சொல்வதற்கு அப்படியே தலையை ஆட்டுங்கள். எதிர்த்துப் பேசுவது ஆகவே ஆகாது. ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டாதீர்.

விருச்சிகம்

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அதை விருச்சிக ராசிக்காரர்களான நீங்கள் ருசிக்க போகிறீர்கள். தைரியமாக புதிய தொழில்களில் இறங்குங்கள். பணவரவு தடையில்லாமல் கிடைக்கும்.வெளிநாடுகளில் இருந்து உங்கள் வியாபாரத்திற்கு உதவி கிடைக்கப் போகிறது. சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் கெத்தாக ஜெயிக்கப் போகிறீர்கள். மனைவி உங்கள் சொல்லை தட்டாமல் நடந்து கொள்வார்.

தனுசு

சின்னச்சின்ன தொல்லைகள் ஏற்பட்டு உங்கள் ஆர்வம் குறையலாம். ஆனால், அதையும் தாண்டி நீங்கள் வெற்றி நடை போடுவீர்கள். பொருளாதாரத்தில் உண்டாகும் ஏற்றம் உங்களை பூரிப்படைய செய்யும். ஆடல், பாடல் போன்ற இசை நிகழ்ச்சிகளில் ஆர்வமாக இருப்பீர்கள். மனதுக்குப் பிடித்த உணவுகளை அருந்தி மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். பணம் தாராளமாகப் புழங்கும்.

மகரம்

இனந்தெரியாத மனக்கவலைகள் இதயத்தை அழுத்திப் பிசையும்.எவ்வளவுதான் எச்சரிக்கையாக இருந்தாலும் பணவிரயம் ஏற்படுவதை தடுக்க இயலாது. ஆனால், குடும்பத்தில் எந்தக் குறையும் இருக்காது. மனைவி, மக்கள் மனதிற்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்வார்கள்.மனைவியிடம் உள்ள சிறுசேமிப்பு இக்கட்டான நேரத்தில் உங்களுக்கு உதவும்.

கும்பம்

முன்னேற்றத்திற்கான அத்தனை கதவுகளும் உங்களுக்காக திறந்திருக்கிறது. கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். பங்குச் சந்தை மார்க்கெட் சுறுசுறுப்பாக இயங்கும். லாபமும் கணிசமாக கிடைக்கும். நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள் நிச்சயமாக உங்களுக்கு சாதகமாக அமையும். உத்தியோகம் பார்ப்பவர்களின் ஊதியம் உயரும். பயிர்த்தொழில் நல்ல லாபம் தரும்.

மீனம்

புதிதாக அறிமுகமான நண்பர்கள் கூட பண உதவி செய்ய தயங்க மாட்டார்கள். உங்களுக்கு உறவினர்களின் ஒத்தாசை தாராளமாக கிடைக்கும். ஆடை அணிமணிகள் சேர்க்கையால் குடும்ப பெண்கள் குதூகலம் அடைவார்கள். விருந்து நிகழ்ச்சிகளால் வீடு கலகலப்பாக இருக்கும். வெளியூர் பயணங்கள் வெற்றிகரமாக அமையும். கணவன் – மனைவி இடையே சந்தோஷ சங்கீதம் இழையோடும்.

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *