மதுரையில் பிரிண்டர்ஸ் அசோசியேசன் ஆர்ப்பாட்டம்

Loading

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் மதுரை பிரிண்டர்ஸ் அசோசியேசன்  தலைவர் நீலகண்டன்,  செயலாளர் கிருஷ்ணகுமார், துணைத்தலைவர்  குபேந்திரன், இணைச் செயலாளர் கதிரவன், முன்னால் தலைவர்கள் ஆனந்தன், சிவகுமார், மோகன் குமார், ஆலோசகர்கள் காமராஜ் பாபு, ஜெகதீசன் ஆகியோர் மத்திய மாநில அரசை வலியுறுத்தி மாபெரும் கவனஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அச்சகங்களுக்கு தேவையான காகிதம் , மை , கெமிக்கல் , பிளேட் பசை போன்ற மூலப்பொருட்களின் கடுமையான விலையேற்றத்தை தடுத்து நிறுத்தும் வகையில்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டி 400 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா பாதிப்பில் பல அச்சகங்கள் மூடப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது . இந்நிலையில் அச்சககங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் கடுமையான விலையேற்றம் அடைந்துள்ளது . கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் சுமார் 80 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது .
இச்சூழலில் அச்சுத் தொழில்  சார்ந்த பல்லாயிரக்கணக்கானோர் தொழிலை நடத்த முடியாமல் வாழ்வாதாரத்தை இழக்க நேர்ந்துள்ளது . இந்நிலையில் அச்சகங்களுக்கு விதிக்கப்படும் GST வரி விகிதம் 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது . மேற்படி விலையேற்றத்தை தடுத்த நிறுத்திட வேண்டும் இல்லை என்றால் எங்களது போராட்டம் தொடரும் என்று கூறினர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *