கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N.ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கை
கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N.ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இந்நிலையில் மார்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ் அவர்களுக்கு கழுவந்திட்டை பகுதியில் குட்கா, புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவலர்கள் சகிதம் அங்கு சென்றபோது அங்கே சந்தேகப்படும்படியாக நின்ற நபரை பிடித்து விசாரணை செய்த போது அவர் மருதங்கோடு பகுதியை சேர்ந்த கிளிட்டஸ் (36) என்பதும் தெரியவந்தது.
பின்பு அவரை தீவிர விசாரணை செய்து, அந்த இடத்தை சோதனை செய்த போது அவர் சட்டவிரோதமாக உடலுக்கு கேடு விளைவிக்ககூடிய தடை செய்யப்பட்ட புகையிலை, மற்றும் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. பின்பு அவரிடமிருந்த 180கிலோ குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, அவர் மீது மார்த்தாண்டம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் செந்தில்குமார் அவர்கள் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தார். மேலும் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யும் குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.