குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் நடைபெற்ற தேசிய அளவிலான 2வது யோகாசனம் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டிகள் மார்ச் மாதம் 29 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை நடைபெற்றது

Loading

குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் நடைபெற்ற தேசிய அளவிலான 2வது யோகாசனம் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டிகள் மார்ச் மாதம் 29 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை நடைபெற்றது
போட்டியில் 19 மாநிலங்களை சேர்ந்த 169 வீரர் வீரங்கனைகள் பங்கு பெற்றனர்.மொத்தம் 69 பதக்கங்களுக்காக நடைபெற்ற இந்த போட்டிகளில் தமிழகம் சார்பில் பங்கேற்ற பெண்கள் அணியினர் 2 தங்கப் பதக்கங்களையும் 5 வெள்ளிப் பதக்கங்களையும் 2 கோப்பைகளையும் பெற்று தேசிய அளவில் இரண்டாவது இடம் பிடித்தனர்.
நேஷ்னல்  யோகசன ஸ்போர்ட்ஸ் பெடரேசன் மற்றும் தமிழ்நாடு யூத் யோகசன ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் சார்பில் தமிழக யோகா பயிற்சியாளர்கள் மற்றும்  தேசிய நடுவர்களுமான எழிலரசி, கீதா,ஆகியோர் தலைமையில் வைஸ்னவி (தங்கம்-2,வெள்ளி-1)நிவேதா,காயத்திரி,ரோகினி, தீபிகா ஆகியோர் தலா ஒரு வெள்ளி பதக்கத்தை வென்றனர்.
தமிழக  வீராங்கனைகள் தங்களது திறமையின் மூலம் 2 தங்க பதக்கங்களையும் 5 வெள்ளி பதக்கங்களையும் ஒரு கோப்பையயும்  பெற்று தேசிய அளவில் இரண்டாம் இடத்திற்கான கோப்பையையும்  கைப்பற்றினர்.
தேசிய அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் மஹாராஸ்டிரா முதல் இடத்தையும் தமிழகம் இரண்டாம் இடத்தையும் பாண்டிச்சேரி, குஜராத்,மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மூன்றாம் இடம் பிடித்ததது குறிப்பிடதக்கது.
0Shares

Leave a Reply