கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவம் ஒன்றியத்தில் பெரிய மாம்பட்டு கிராமத்தில் முருகன் கோவிலில், தமிழக சமத்வ கட்டிட தொழிலாளர் சங்கத்தின் சார்பாக, உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவம் ஒன்றியத்தில் பெரிய மாம்பட்டு கிராமத்தில் முருகன் கோவிலில், தமிழக சமத்வ கட்டிட தொழிலாளர் சங்கத்தின் சார்பாக, உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது, இதில் இச்சங்கத்தின் தலைமை நிறுவனரும் & மாநில பொதுச் செயலாளருமான MM.சுப்ரமணியன் அவர்களும் மற்றும் மாநில துணைப் பொதுச் செயலாளர் S.சதீஷ் குமார் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
தியாகதுருவம் ஒன்றியத்தில் பெரியமாம்பட்டு கட்டுமானம் அமைப்பு தமிழ் நாடுதிறன் மேம்பாட்டு கழகம் TNSDC & கட்டுமானத் தொழில் வளர்ச்சிக்குழுமம், CIDC, சார்பில் தலைமை பயிற்சியாளர், திரு, மணிமாறன், அவர்களால் நடத்தப்பட்டது
இந்த பயிற்சி முகாமில் மாநில அமைப்பு செயலாளர், VT, செல்வம், அவர்கள் முன்னிலை வகித்தார், இப்பயிற்சி முகாமில். கள்ளக்குறிச்சி மண்டல அமைப்பு செயலாளர் P. பழனிவேல் , அவர்கள் மேற்பார்வையிலும்
சிறப்பு அழைப்பாளர் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் R.அண்ணாதுரை, இளைஞர் அணி சேலம் மாவட்ட தலைவர் D. காளிமுத்து, இளைஞர் அணி தலைவாசல் ஒன்றிய துணை செயலாளர் A. மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தியாகதுருவம் ஒன்றிய தலைவர் k.நாராயணன் அவர்கள், ஒன்றிய துணைத் தலைவர் K.சரவணன் தலைமையில், ஒன்றிய செயலாளர் S.முத்தையன், வரவேற்புரை ஆற்றினார். தியாகதுருவம் ஒன்றிய துணைச் செயலாளர் S. மணிகண்டன் மற்றும் தியாகதுருவம் ஒன்றிய பொருளாளர் G. செல்வராஜ் நன்றியுரை ஆற்றினார்.
இந்த பயிற்சி முகாமில் சுமார் 150க்கு மேலான சுற்றுவட்டார உறுப்பினர்கள் பயிற்சி முகாமில் கட்டுமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.