தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு உகாதி திருநாளை கொண்டாடும் விதமாக சென்னை ஆதியப்பா தெருவில் உள்ள ஸ்ரீகன்யகா பரமேஸ்வரி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியல் சுபக்ருத் தெலுங்கு வருட பிறப்பு  விழா

Loading

தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு உகாதி திருநாளை கொண்டாடும் விதமாக சென்னை ஆதியப்பா தெருவில் உள்ள ஸ்ரீகன்யகா பரமேஸ்வரி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியல் சுபக்ருத் தெலுங்கு வருட பிறப்பு  விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
உகாதி திருநாள் விழாவில் கல்லூரி தாளாளர் ஸ்ரீகுக்கிலம் ரமேஷ், கல்லூரி முதல்வர் டாக்டர் டி.மோகன ஶ்ரீ ,துணை முதல்வர் பி.பி.வனிதா மற்றும் கல்லூரி நிர்வாகிகள்,ஆசிரியர்கள்,கல்லூரி மாணவிகள் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர்.
உகாதி திருநாள் பற்றி கல்லூரி முதல்வர் கூறியதாவது உகாதி திருநாளன்று அறுசுவை கொண்ட பச்சடி ஒன்று  பரிமாறிகொள்வதும். இந்த பச்சடியை ஆண்டுக்கு ஒரு முறை சாப்பிடுவது நல்லது என்றும்,கோடை காலங்களில் ஏற்படும் பருவநிலை நோய்களை எதிர்கொள்வதோடு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இவ்வகை பச்சடியில் உள்ளது என அவர் தெரிவித்தார். இனிப்புக்கு வெல்லம், புளிப்புக்கு புளி தண்ணீர், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், காரத்திற்கு மிளகு மற்றும் உப்பு சேர்ந்த பானத்தை அனைவருக்கும் வழங்கபட்டது.
உகாதி திருநாளில் இனிப்புக்கு வெல்லம், புளிப்புக்கு புளி தண்ணீர், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், காரத்திற்கு மிளகு மற்றும் உப்பு, பழங்கள்,ஆகியவை  இறைவனுக்கு அர்ப்பணித்து ஆசிரியர்கள் கல்லூரி மாணவிகள் இவ்வுலகில் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடனும் செழிப்போடு வாழ பிரார்த்தனை செய்தனர்.
இந்து கலாச்சாரம் மற்றும் பாரம்பரியமுறையினை வெளிப்படுத்தி கல்லூரி வளாகத்தில் ரங்கோலி மற்றும் மாணவர்கள் பதுக்கம்மா மலர் அலங்காரம் செய்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *