கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் நேற்று முன்தினம் சுற்றரிக்கை ஒன்று வெளியிட்டார்

Loading

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் நேற்று முன்தினம் சுற்றரிக்கை ஒன்று வெளியிட்டார் அதில், குமரி மாவட்டத்தில் இருச்சக்கர வாகன ஓட்டிகள் பெரும்பாலானோர் தலை கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவதில்லை. அதிலும் அரசு பணியில் இருக்கும் அதிகாரிகளே தலை கவசம் அணியாமல் செல்கின்றனர்.  அரசு சட்டத்தை அரசு பணியாளர்களே  மதிப்பதில்லை என்றும்  இந்த அலட்சிய போக்கை மனதில் கொண்டு முதல் கட்டமாக  மாவட்ட  ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் அனைத்து அரசு  பணியாளர்களும் இரு சக்கர வாகனம் ஓட்டும்பொழுது கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.   இந்த அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து முதல் கட்டமாக குமரி ஆட்சியர் அலுவலக வளாகத்தின் உள்ளே வரும் அரசு ஊழியர்கள், காவல்துறையினர் மற்றும் பொது மக்கள் தலை கவசம் அணிந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கபட்டனர்

0Shares

Leave a Reply