வெட்டுவானம் அருள்மிகு எல்லை அம்மன் திருக்கோயிலில் வரும் அம்மாவாசை முன்னிட்டு மஹா பிரத்தியங்கிரா யாகம்
வெட்டுவானம் அருள்மிகு எல்லை அம்மன் திருக்கோயிலில் வரும் அம்மாவாசை முன்னிட்டு மஹா பிரத்தியங்கிரா யாகம்.
வேலூர் மார்ச் 28
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் வெட்டுவானம் அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோவிலில் வருகின்ற அமாவாசை முன்னிட்டு மஹாபிரத்தியங்கிரா யாகம் வெகு சிறப்பான முறையில் நடைபெற இருக்கிறது இதனை முன்னிட்டு இந்த அருள்மிகு எல்லை அம்மன் திருக்கோயிலில் மாதம் மாதம் வரும் அமாவாசை தினத்தன்று மாலை 6 மணிக்கு மகா பிரத்தியங்கரா யாகம் நடைபெறுகிறது. இந்த யாகத்தின் மகிமை ஆனது ஆபிசார தோஷம் பில்லி சூனியம் ஏவல் செய்வினை போன்ற தீய சக்திகள் விலகி திருமணத்தடை வியாபார விருத்தி அடைய இறை சக்தியின் அருளைப் பெற பரிகார பூஜை நடைபெறுகின்றது இதனைத் தொடர்ந்து அம்மன் ஊஞ்சல் தாலாட்டு நடைபெறும் இந்த எல்லையம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது சக்தி வாய்ந்ததும் இங்கு வேண்டுவோர் அருளை கூடிய விரைவில் நிவர்த்தியும் செய்து கொடுப்பாள் ஸ்ரீ அருள்மிகு எல்லை அம்மன் என்பது ஒரு ஐதீகம் உள்ளது இந்தக் கோயிலில் நடைபெறும் மஹாபிரித்தியங்கரா யாக பூஜையில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ எல்லை அம்மனின் பரிபூரண அருளை பெற்று தரிசனம் நடைபெறும். முடிவில் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
குறிப்பு :
இந்த மஹா பிரத்தியங்கரா பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் 100 ரூபாய் அலுவலகத்தில் செலுத்தி பரிகார பூஜை பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவித்தனர்.