ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் 75வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழா
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் 75வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழா ஒரு வார நிகழ்ச்சியில் குப்பையில்லா மாவட்டம் என்ற நிலையை அடைய பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலையோரம் மற்றும் குப்பைகள் உள்ள இடங்களில் குப்பைகளை தூய்மை செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் அவர்கள் துவக்கி வைத்து சிறப்பித்தார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபாசத்யன், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே. எல். ஈஸ்வரப்பன், ஆற்காடு நகர மன்ற தலைவர் தேவிபென்ஸ் பாண்டியன், நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார், ஆற்காடு நகர காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி, உதவி ஆய்வாளர் மகாராஜன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் குமரன் மோட்டார்ஸ் விஜயகுமார், பி.டி. குணா, தக்ஷிணாமூர்த்தி, கண்மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் அவர்கள் குப்பைகளை அல்லும் பணியினை துவக்கிவைத்து மரக்கன்றுகள் நட்டு ஆற்காடு பஜார் பகுதி இளங்குப்பன் தெரு, ஆரணி ரோடு ஆகிய இடங்களில் நடைபெற்றுவரும் கால்வாய் தூர்வாரும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் அரசு அலுவலர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.