கடலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் நடவடிக்கை 1100 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
கடலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் நடவடிக்கை 1100 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது கடலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு காவல் உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் . சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் காவலர்கள் சகிதம் விருத்தாசலம் To சேலம் மெயின் ரோடு , சிறுபாக்கம் Dr AKP பள்ளி அருகில் வாகன தணிக்கை செய்தபோது நின்றிருந்த அவ்வழியாக வந்த நான்கு சக்கர வாகனம் TN 15 W 8437 MAHINDRA SUPRO MAXI TRUCK மினி வேனை சோதனையிட்ட போது அதில் தலா 50 கிலோ கொண்ட 22 மூட்டைகளில் மொத்தம் 1100 கிலோ ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக கட்டி சேலத்திற்கு கடத்த முயன்றது தெரியவந்தது . கடத்தலில் ஈடுபட்ட சிவக்குமார் வயது -49 தபெ கிருஷ்ணமூர்த்தி , நெ .137 / 543 , சேலம் மெயின்ரோடு சின்னசேலம் , கள்ளகுறிச்சி மாவட்டம் . என்பதும் இவர் அடரி , மாங்குளம் . கஞ்சிராங்குளம் சிறுபாக்கம் ஆகிய பகுதியிலுள்ள பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதை கோழி தீவனத்திற்காக சேலம் கடத்த முயன்றது தெரியவந்தது இவரை இவரை கடலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்