விருதுநகர் பெண் பாலியல் பலாத்காரம்: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர முதல்-அமைச்சர் உத்தரவு – டி.ஜி.பி. தகவல்

Loading

சென்னை,

விருதுநகரில் இளம்பெண் ஒருவர் தன்னை சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன் உடன் விசாரணைக்கு எடுத்து ெகாள்ளப்பட்டது.

விசாரணையில் விருதுநகர் மாவட்டத்தில் தாயாருடன் குடியிருந்து வரும் 22 வயது இளம் பெண்ணிற்கு ஹரிஹரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணுடன் பாலியல் உறவு வைத்ததை வீடியோ பதிவு செய்துள்ளார். பின்பு திருமணம் செய்துகொள்ள அந்த பெண் ஹரிஹரனை வற்புறுத்தினார்.

வீடியோ

அவர் திருமணம் செய்து கொள்ள மறுத்ததினால் இளம் பெண்ணிற்கு வேறு இடத்தில் திருமண ஏற்பாடு செய்த போது, ஹரிஹரன் பதிவுசெய்த வீடியோ காட்சிகளை காட்டி மிரட்டி தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

அதன் பின்னர் வீடியோவினை அவரது நண்பர்களுக்கு சமூக ஊடகத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளார். ஹரிஹரனின் நண்பர்கள் வீடியோவை இளம் பெண்ணிடம் காட்டி மிரட்டி அவருடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டுள்ளதும், ஹரிஹரன் இளம் பெண்ணை அடிக்கடி தொந்தரவு செய்ததும் தெரியவந்துள்ளது.

மு.க.ஸ்டாலின் உத்தரவு

விசாரணையில் கிடைத்த தகவல்கள் மற்றும் தடயங்களின அடிப்படையில் 8 பேர் குற்றவாளிகள் என தெரியவந்தது. இதில் ஹரிஹரன், மாடசாமி, ஜுனத் அகமது, பிரவீன் ஆகிய 4 பேரை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். மற்ற 4 பேரும். சிறார்கள். 18 வயதிற்கு உட்பட்ட இவர்கள் சிறார்கள் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு ராமநாதபுரம் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு, நேர்முகமாகவும், மறைமுகமாகவும் குற்றத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றப்பிரிவு தாக்கல் செய்யப்பட்டு அதிக பட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் புலன் விசாரணை துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. மதுரை மண்டல ஐ.ஜி. ஆஸ்ரா கர்க், மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி ஆகிேயாரும் விருதுநகரில் முகாமிட்டு புலன் விசாரணையை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *