புதுவையில் மேல் நிலைப்பள்ளிகள் ஆரம்பித்ததிலிருந்து மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து அதிக இடங்களைப் பெற்று சாதனை படைத்து வருகின்றனர்
![]()
புதுவையில் மேல் நிலைப்பள்ளிகள் ஆரம்பித்ததிலிருந்து மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து அதிக இடங்களைப் பெற்று சாதனை படைத்து வருகின்றனர். இந்த ஆண்டு ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 10 மாணவர்களும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 5 மாணவர்களும், மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரியில் 6 மாணவர்களும், வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் 5 மாணவர்களும், பிம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 4 மாணவர்களும் M.B.B.S. படிப்பில் சேர்ந்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் பாஸ்கல் ராஜ் ஸ்டெதாஸ்கோப் (Stethoscope) வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்வில் பெற்றோர்களும், மாணவர்களும் கலந்து கொண்டு பள்ளி முதல்வருக்கு நன்றியை தெரிவித்தனர்.

