படைப்பிலேயே சிறப்பு மிக்கவர் பெண்தான் மகளிர் தின விழாவில் வழக்குரைஞர் கே.சாந்தகுமாரி சிறப்புரை
சென்னை , மார்ச் 18-
வலிகளை தாங்கிக் கொள்கிற சக்தி பெண்களுக்கு மிகுதியாகவே இருக்கிறது . பத்து மாதங்களாக குழந்தையை வயிற்றில் சுமந்து, கடுமையான வலியையும் பொறுத்து பிரசவித்து, மனித குலத்தை வாழ வைப்பவர்கள் பெண்கள் தான். படைப்பிலேயே சிறப்புமிக்கவர்கள் பெண் கள்தான். நாம் வாழும் வாழ்க்கையில் இருந்தே கற்றுணர்ந்து, நம்மை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்து கொள்வதே இன்றைய மகளிர் தினத்தின் படிப்பினையாக இருக்கிறது என உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் ,பெண்ணிய செயற்பாட்டாளருமான முனைவர் கே. சாந்தகுமாரி பேசினார்.
“அனைத்து மகளிரும் உழைக்கும் மகளிரே” எனும் பெண்கள் தின சிறப்பு நிகழ்வு , தமிழ்நாடு முற்போ க்கு கலை இலக்கிய மேடை மற்றும் இந்திய ஐக் கிய பெண்கள் முன்னணி சார்பில் மார்ச் 6 அன்று ,சென்னை தேனாம்பேட்டை “சேஃப் வே எஜுகேஷ னல் சர்வீசஸஸ் ” வளாகத்தில், எம். கல்யாணசுந் தரம் அரங்கில், சிறப்பாக நடந்தேறியது.
பெண்கள் அமைப்பின் செயல்பாட்டாளர்கள் ஜி. காமாட்சி , பா.சரோஜா மற்றும் சாந்தி முன்னிலை யில், பன்முக படைப்பாளி இந்திரன் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் , எழுத்தாளர் கள் லட்சுமி விசாகன் , சிபி.தி.ஸ்பார்ட்டன், வாசுகி தேவராஜ் உள்ளிட்டவர்கள் கருத்துரைத்து பேசினர். உயர்நீதிமன்ற வழக்குரைஞரும், பெண்ணிய செயற்பாட்டாளருமான முனைவர் கே. சாந்தகுமாரி சிறப்புரை ஆற்றினார்.
சிறப்புரை ஆற்றிய சாந்தகுமாரி பேசியதாவது; பொதுவுடமை சித்தாந்தங்களை எடுத்துரைத்து, வாழ்விலும் வழக்கறிஞர் தொழிலும் எனக்கு வழிகாட்டியாக இருந்து, ஆற்றுப் படுத்தியவர் தோழர் எம்.கே.என்றழைக்கப்படும் எம்.கல்யாண சுந்தரம்தான். வழக்கறிஞராக இருந்த எனது கணவரின் தொழில் அனுபவங்களும் எனது வழக்கறிஞர் தொழிலுக்கு ஊக்கமாக அமைந்தது.
நான் பொதுவுடமை இயக்கத்தை சார்ந்தவளாக இருந்ததினால், எனக்கான வழக்குகள் மிக நெருக்கமான மனித உறவுகளுடனாகவே அமைந்திருந்தது . வழக்குகளுக்கு உரிய தொகை கொடுக்க முடியாத பெண்களுக்கான குடும்ப நீதிமன்ற வழக்குகளை மேற்கொண்டு, பல நூறு பெண்களின் துயரத்தை துடைத்து , ஆறுதல் அளித்த வாய்ப்புகளே எனக்கு கிடைத்திருந்தது.
பல் திறன்களும் , உயர் அறிவுத் திறமையும் இயல் பாகவே அமைந்தவர்கள் பெண்கள். அதனால்தான் குடும்பப் பொறுப்புகளை அவர்களால் சுலபமாக ஏற்று நடத்தி வெற்றி கொள்ள முடிகிறது . வீட்டுச் செலவுக்கான பணத்தை சிக்கனமாக செலவழித்து அதிலும் மிச்சம் பிடித்து, குடும்பத்தின் வாழ்வியல் தேவைகளை அவர்களே நிறைவு செய்கிறார்கள்.
இப்போது நடந்து முடிந்த ஊராட்சி நகர மன்ற தேர்தலில், பெரும்பான்மையான பெண்கள் தேர்ந் தெடுக்கப்பட்டு, நகரமன்ற தலைவராகவும் , மேயர் துணை மேயர்களாகவும் பொறுப்பேற்றுக் கொண் டிருக்கிறார்கள். நம் வாழ்க்கைதான், நமக்கான படிப்பினை களை நமக்கு சொல்லிக் கொடுக்கிறது. மார்க்சியம், கம்யூனிசம் எல்லாமும் , இந்த வாழ்வியலின் அனுபவங்கள்தானே. இதனை பெண்கள் முழுமை யாக உள்வாங்கிக் கொண்டு நம்மை மாற்றி அமை த்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந் திடுவதே இன்றைய மகளிர் தினத்தின் செய்தி யாக இருக்க வேண்டும் என சாந்தகுமாரி பேசினார்.
தலைமை உரையாற்றிய கலை விமர்சகர் இந்தி ரன் ராஜேந்திரன் பேசும்பொழுது; பெண்களும் ஆண்களும்தான் சுதந்திரமாக இருக்க வேண்டிய உலகத்தை படைத்த கொள்ளவேண்டும் . பிறப்பின் அடிப்படையில் தலித்துகள் அடிமைப் படுத்தப்படு வது போல , பெண்களும் அடிமைப் படுத்தப் படுகி றார்கள் .
உண்மையில் பெண்கள்தான் படைப்பு சக்திமிக் கவர்களாக இருக்கிறார்கள். ஆதி சமூகத்திலி ருந்து பெண்கள்தான் முக்கிய பாத்திரமேற்று சமூகத்தை மேம்படுத்தி இருக்கிறார்கள் என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. பெண்களை பல வீனமானவராக கருதி, அவர்களை மேலாதிக்கம் செய்யும் ஆண்களின் வளர்ச்சிப் போக்கு மாற வேண்டும் என இந்திரன் பேசினார்.
தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் மாநிலத் தலைவர் எஸ் பாஸ்கரன் நிறைவுரை
ஆற்றி நன்றி தெரிவித்து பேசினார் . எழுத்தாளரும் கலை இலக்கிய மேடையின் பொறுப்பாளருமான தேனி விசாகன், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து தொகுப்புரை வழங்கினார் . இந்திய ஐக்கிய பெண்கள் முன்னணியினர் மற்றும் கலைஇலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் .