சென்னை அண்ணா நகரில் பயங்கர தீ விபத்து.! ஆபத்தில் இருந்த 6 பேரின் நிலை.!

Loading

சென்னை அண்ணா நகரில் இருக்கும் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர்.

நவீன தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வருகின்றது. மேலும், அதே கட்டிடத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.

இந்த பயங்கர தீ விபத்தில் ஆறு பேர் கட்டிடத்தில் சிக்கியிருந்த நிலையில் தற்போது அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு இருக்கின்றனர். தீ எப்படி உருவானது என்பது குறித்து இன்னமும் தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

0Shares

Leave a Reply