தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிய 21 தமிழறிஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கவுரவித்தார்

Loading

சென்னை , மார்ச் 16-
தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழறிஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று விருதுகளை வழங்கி சிறப்பித்து உள்ளார். தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புகள், திங்கள் இதழுக்கு என மொத்தம் 21 விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
திருவள்ளுவர் விருது, அண்ணா விருது, காமராசர் விருது உள்பட தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டு ஆற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ் அறிஞர்களுக்கு வழங்கிய விருதுகளின் பட்டியல் பின்வருமாறு..
அய்யன் திருவள்ளுவர் விருது 2022 : மீனாட்சி சுந்தரம்
பேரறிஞர் அண்ணா விருது 2021 : நாஞ்சில் சம்பத்
பாவேந்தர் பாரதிதாசன் விருது 2021 : புலவர் செந்தலை கவுதமன்
செயலின் செல்வர் விருது 2021 : சூர்யா சேவியர்
இளங்கோவடிகள் விருது 2021 : நெல்லை கண்ணன்
மறைமலையடிகளார் விருது 2021 : சுகி.சிவம்
முதலமைச்சர் கணினி தமிழ் விருது 2021 : வ.தனலட்சுமி
தந்தை பெரியார் விருது 2021 : முனைவர் க.திருநாவுக்கரசு
பெருந்தலைவர் காமராஜர் விருது 2021 : முனைவர் குமரி அனந்தன்
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ விசுவநாதன் விருது 2021 : முனைவர் ம.ராசேந்திரன்
ஜி.யு போப் விருது 2021 : அ.சு பன்னீர் செல்வன்
தேவநேய பாவணர் விருது 2021 : முனைவர் கு.அரசேந்திரன்
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது – 2021 : முனைவர் இரா.சஞ்சீவிராயர்
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது – 2021 : உயிர்மை (திங்களிதழ்) ஆசிரியர் எஸ்.அப்துல்ஹமீது (மனுஷ்யபுத்திரன்)
அண்ணல் அம்பேத்கர் விருது – 2021 : நீதியரசர் சந்துரு
மகாகவி பாரதியார் விருது – 2021 : பாரதி கிருஷ்ணகுமார்
கம்பர் விருது – 2021 : பாரதி பாஸ்கர்
உமறுப்புலவர் விருது – 2021 : நா.மம்மது
சிங்காரவேலர் விருது – 2021 : கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம்
அயோத்திதாசப் பண்டிதர் விருது – 2021: ஞான.அலாய்சியஸ்
தமிழ்த்தாய் விருது – 2021 : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் மலேசியா
விருதாளர்களுக்கு விருது தொகையாக ரூ.2 லட்சத்துக்கான காசோலையும் தங்கப் பதக்கமும் தகுதியுரையும் வழங்கி பொன்னாடை அணிவிக்கப்பட்டது.

பெரியார், அம்பேத்கர் விருது பெறுபவருக்கு விருது தொகையாக ரூ5 லட்சம், தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கி பொன்னாடை அணிவித்து சிறப்புச்செய்யப்பட்டது. மேலும், 2021ம் ஆண்டிற்கான சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது உயிர்மை திங்களிதழுக்கு வழங்கி விருது தொகையான ரூ.2 லட்சம், தகுதியுரை, கேடயம், பொன்னாடையும், 2021ம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும் வழங்கி ரூ.5 லட்சம், தகுதியுரை, கேடயம், பொன்னாடை முதலியன வழங்கப்பட்டன. இந்த விழாவில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், அரசு உயர் அதிகாரிகள், தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *