வாழைப்பழத்தில் விஷம் வச்சு கொன்னுட்டாங்க..!! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்.. போலீஸின் தீவிர விசாரணை

Loading

மருமகளுக்கு வாழைப்பழத்தில் விஷம் வைத்து கணவர் மற்றும் குடும்பத்தினர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள கோபிநாதம்பட்டியில் ராஜா என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் கார்த்திக் என்பவருக்கும், ரேவதி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ரேவதியிடம் வரதட்சணை கேட்டு கார்த்திக்கின் குடும்பத்தினர் துன்புறுத்தியுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ரேவதியில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ரேவதி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தனது தங்கைக்கு கார்த்திக் மற்றும் அவரது உறவினர்கள் விஷம் கலந்த வாழைப்பழத்தை கொடுத்து கொலை செய்து விட்டதாக ரேவதியின் சகோதரி பிரியா காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் படி காவல்துறையினர் கார்த்திக், மாமியார் பழனியம்மாள் உறவினர்கள் ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *