இன்றைய ராசி பலன்
மேஷம்
சந்திரன் இன்றைய தினம் இரண்டாவது வீட்டில் குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் பண வரவு அதிகரிக்கும். உங்கள் பேச்சிற்கு இன்றைக்கு மதிப்பு மரியாதை கூடும். தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக பேசுவது நல்லது. குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். உறவினர் வருகையால் சந்தோஷம் அதிகரிக்கும்.
ரிஷபம்
சந்திரன் உங்கள் ராசிக்குள் சஞ்சரிக்கிறார். இன்று உங்களின் உடல் நலம் அற்புதமாக இருக்கும். பண வரவு இன்று தாராளமாக இருக்கும். உறவினர்களிடம் பேசும் போது கவனமாகவும் நிதானமாகவும் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வீண் மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும்.
மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு 12வது வீடான விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வியாபாரத்தில் பண வருமானம் அதிகரிக்கும். வரவுக்கு ஏற்ப செலவும் அதிகரிக்கும். இன்று உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது. முன் பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. பயணங்களால் வீண் அலைச்சல் அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் கவனமாகவும் நிதானமாகவும் பேசவும்.
கடகம்
சந்திரன் உங்கள் ராசிக்கு 11 வது வீட்டில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் பணவரவு அதிகரிக்கும். இன்று நீங்கள் எடுத்த முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். அஷ்டமத்து சனி காலம் என்பதால் வீட்டில் குடும்பத்தினருடன் பேசும் போது கவனமாக பேசவும். சின்னச் சின்ன சண்டைகளுக்கு விட்டுக்கொடுத்து செல்லவும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வரவுக்கேற்ற செலவு அதிகரிக்கும். எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் ஏற்படும்.
சிம்மம்
சந்திரன் உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் பயணம் செய்கிறார். அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. கொடுத்த கடன்களில் பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். திடீர் பணவரவு வரும். வேலை விசயமாக முக்கியமான நபரை இன்று பார்க்கப் போகலாம். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும்.
கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு 9வது வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் தம்பதிகள் இடையே நெருக்கம் அதிகரிக்கும். திடீர் செலவு அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். உங்கள் காதல் துணையுடன் போன் மூலம் பேசி பழைய நினைவுகளை அசைபோடுவீர்கள். கணவன் மனைவி இடையே ரொமான்ஸ் உணர்வுகள் அதிகரிக்கும். காதலை சொல்ல இன்று நல்ல நாள்.
துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் மறைந்திருக்கிறார். சந்திராஷ்டமம் இருப்பதால் பயணங்களால் அலைச்சலும் உண்டாகும். வீட்டிலும், அலுவலகத்திலும் அமைதியாக இருங்க. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க யாருக்கும் பணம் கடன் கொடுக்க வேண்டாம். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைக்கவும். நேரம் தவறி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.
விருச்சிகம்
சந்திரன் உங்கள் ராசிக்கு 7வது வீட்டில் களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். தொழில் வியாபாரத்தில் கவனமாக இருப்பது அவசியம். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும். அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. காதல் வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் குதூகலமாக இருக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். தெளிவான மனநிலையில்இருப்பீர்கள்.
தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் மறைந்திருக்கிறார். கடன் பிரச்சினை தீரும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நல்லது. பண விவகாரங்களில் ரொம்ப எச்சரிக்கை தேவை. பயணங்களால் வீண் அலைச்சலும் ஆரோக்கிய பிரச்சினையும் ஏற்படலாம். உடல் நலனில் அக்கறை தேவை. சாமர்த்தியமான பேச்சு லாபம் தரும். இன்று கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சினைகள் சரியாகும். குடும்பச் செலவுகள் அதிகரிக்கும் வீண் விரைய செலவுகளை தவிர்த்து விடுவது நல்லது.
மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு 5வது பயணம் செய்வதால் குழந்தைகள் உடல் நலனில் அக்கறை தேவை. பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்ய இன்று முயற்சி செய்யலாம். உறவினர்கள் மூலம் மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடைபெறும் வண்டி வாகன யோகம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபமும் முன்னேற்றமும் உண்டாகும்.
கும்பம்
சந்திரன் உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்வீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள் திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை குறையும்.
மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு 3வது வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். இன்று கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்ப வாழ்க்கையில் குதூகலமாக இருப்பீர்கள். உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.