தமிழ்நாட்டில் இன்று முதல் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு

Loading

சென்னை,

தமிழ்நாடு அரசுக்கு அதிக வருவாய் டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் கிடைத்து வருகிறது. கடைசியாக கொரோனா பாதிப்பு ஏற்படும் முன்பு, 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந் தேதி டாஸ்மாக் மதுபான வகைகளின் விலை உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் டாஸ்மாக் மதுபானங்களில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுபானங்களில் விலை இன்று உயர்த்தப்படுகிறது. பகல் 12 மணிக்கு கடை திறந்த உடன் இந்த விலை உயர்வு அமலாகுகிறது.

அதன்படி, டாஸ்மாக் மதுபானக்கடைகளில் குவாட்டர் ஒன்றுக்கு சாதாரண ரகங்களுக்கு 10 ரூபாய் உயர்த்தப்படுகிறது. மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு 20 ரூபாய் உயர்த்தப்படுகிறது. ஆப் பாட்டிலுக்கு சாதாரண மதுபான ரகங்களுக்கு 20 ரூபாய் உயர்த்தப்படுகிறது. மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு 40 ரூபாய் உயர்த்தப்படுகிறது.

புல் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு 40 ரூபாய் உயர்த்தப்படுகிறது. மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு 80 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. பீர் வகைகள் விலை 10 ரூபாய் உயர்த்தப்படுகிறது.

0Shares

Leave a Reply