‘நான் ஏன் எல்லாரையும் வெறுக்கணும்’- இணையத்தில் வைரலான சிறுவனுக்கு முதலமைச்சர் நேரில் பாராட்டு

Loading

இணையதள தொலைக்காட்சிக்கு மனிதநேயம், மதம் தாண்டிய ஒற்றுமை குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவர் ஏ.அப்துல்கலாம், முதலமைச்சரை அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

‘எல்லாரும் உலகத்துல சமம். நம்ப யாரையும் புடிக்காதுன்னு முடிவு எடுக்க முடியாது. எல்லாரும் நம்பளை மாதிரிதான். சிலப்பேருக்கு கஷ்டம் இருக்கும். அந்தக் கஷ்டத்தை வெளில காட்ட மாட்டாங்க. உள்ளேயே வச்சிக்கிட்டு இருப்பாங்க. யாரையும் புடிக்காதுன்னு சொல்லாதீங்க. எல்லாரும் என்னை பல்லான்னுதான் கூப்பிடுவாங்க. நான் ஏன் யாரையும் புடிக்காதுன்னு சொல்லணும்? எல்லாரும் நண்பர்கள் மாதிரிதான்.

ஒற்றுமை இல்லாம ஏன் இருக்கணும். நம்ம நாடு ஒற்றுமை நாடுன்னு சொல்றோம். ஒற்றுமை இல்லாம இருந்துச்சினா எப்படி? இந்தக் கருத்து எல்லோர்கிட்டயும் போய் சேரணும். அப்போதான், மனித நேயம் போய் சேரணும். மனித நேயம் இருக்கணும்’ என்று பெரியோர்களாகியும் ‘பெரியார்’ ஆகாமல் இருக்கும் சமூகத்திற்கு மனித நேயத்தையும் அன்பையும் வலியுறுத்திப் பேசி சமூக வலைதளங்களில் அப்ளாஸ்களை அள்ளினான் சிறுவன் அப்துல் கலாம். சமூக வலைதளம் முழுக்க அவனை கொண்டாடித் தீர்க்கின்றனர்.

முதல்வர் மு.க ஸ்டாலின் பாராட்டாமல் இருப்பாரா? சிறுவன் அப்துல் கலாமையும் அவனது பெற்றோரையும் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். மேலும், ஜீ தமிழ் சேனலில் பெரியார் குறித்து பேசிய சிறுவர்களை அழைத்தும் பாராட்டினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *