தன்னை தானே சுற்றும் பூமி….. 1 நொடி நின்றால்….?

Loading

சூரிய கோணத்தில் பெரிய கோள்களில் ஒன்றாக கருதப்படும் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு நொடி சுற்றுவதை நிறுத்திவிட்டால் ஏற்படும் விளைவை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாது. அதாவது வருடத்திற்கு 3 சென்டி மீட்டர் தூரம் நிலா பூமியை விட்டு விலகி செல்லும் நிலையில் பூமி சுற்றுவதை நிறுத்தினால் நிலா கண்ணுக்கு எட்டாத தூரத்திற்கு சென்று விடும்.

அதோடு தன்னைத் தானே சுற்றுவதை மட்டுமே நிறுத்திக் கொண்ட பூமி சூரியனை தொடர்ந்து சுற்றுவதால் பூமியின் ஒரு பக்கம் எப்போதும் இருளை நோக்கி குளிர்ந்த மற்றும் இருட்டான பகுதியாகவும் மறுபக்கம் சூரியனை நோக்கி வறண்ட மற்றும் வெப்பம் நிறைந்த பகுதியாகவும் இருக்கும்.

இதனால் பூமியில் இருந்து காற்று மற்றும் தண்ணீர் வெளியேற தொடங்கி செவ்வாய் கிரகம் போன்று காட்சியளிக்கத் தோன்றும்.

அதேபோன்றே பூமியைப் பாதுகாக்க சுற்றி இருக்கும் மேக்னெட்டிக் ஃபீல்ட் அதிக வெப்பத்தால் அழியத் தொடங்கும். இது சூரியனின் தாக்கத்தை அதிகரிக்கச்செய்து பூமியில் உள்ள உயிர்களை பாதிக்கும். இது பூமிக்கு வெளியிலிருந்து ஏற்படும் பாதிப்பு மட்டுமே. ஆனால் பூமிக்குள் இதைவிட கொடூரமான பாதிப்புகள் ஏற்படும்.

பூமியைவிட வேகமாக சுற்றிக் கொண்டு இருக்கிறாய் என்று பேச்சுவழக்கில் சிலரைக் குறிப்பிட்டு கூறுவார்கள். ஆனால் பூமி சுற்றும் வேகம் நினைத்தும் பார்க்க முடியாத ஒன்று. அதாவது ஒரு மணி நேரத்திற்கு 1,600 கிலோ மீட்டர் வேகத்தில் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் அது பூமியின் உள்ளே இருக்கும் நமக்கு தெரியாது.

அதேபோன்று இவ்வளவு வேகத்தில் சுற்றும் பூமி ஒரு நொடி சட்டென்று நின்று விட்டால் ஏற்படும் பாதிப்பின் அளவும் நமக்கு தெரியாது. நாம் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருக்கிறோம். பயணம் அமைதியாக இருக்கிறது. ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக பேருந்து ஒரு வினாடி சட்டென நின்று விட்டால் பலர் நிலைதடுமாறி முன்னால் சென்று விழுந்து விடுவார்கள். அல்லது முன்னால் இருக்கும் சீட் கம்பியில் மோதிக் கொள்வார்கள். சாதாரணமாக ஒரு மணி நேரத்திற்கு 40 அல்லது 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் பேருந்து சட்டென நின்றாலே இப்படி பாதிப்பு ஏற்படும் என்றால், 1,600 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் பூமி நின்று விட்டால் என்ன ஆகும்?

பூமி நின்ற அடுத்த கணம் அதே 1600 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியின் உள்ளே இருக்கும் மனிதர்கள், பொருட்கள் கட்டிடங்கள் போன்றவை தூக்கி வீசப்படும்.

அது எவ்வளவு உயரத்திற்கு என்று யாராலும் கணிக்க முடியாது. அதோடு தூக்கி வீசப்படுபவர்கள் கீழே விழுந்தாலும் உருண்டு கொண்டே தான் இருப்பார்கள் தவிர அவர்கள் உயிர் பிழைப்பது மிகவும் அரிது. நிலத்தில் நின்று கொண்டிருந்தால் தானே தூக்கி வீசப்படுவோம் நிலத்திற்கு அடியில் ஆழமாக குழி தோண்டி சென்று பாதுகாப்பாக இருக்கலாம் என்று நிச்சயமாக கூற முடியாது. ஏனென்றால் பூமி நின்றவுடன் நிலங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் இதனால் நிலத்திற்கு அடியில் பாதுகாப்பாக இருக்கலாம் என்று நினைத்தால் சுற்றி இருக்கும் நிலமே நம்மை அழுத்தி உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

நிலமும் வேண்டாம் நிலத்திற்கு அடியிலும் வேண்டாம் விமானம் மூலம் ஆகாயத்தில் பறந்தால் தப்பிக்க முடியுமா என்று யோசித்தால் அதற்கும் வாய்ப்பு இல்லை. பூமி நின்றவுடன் பொருட்கள் அனைத்தும் எப்படி தூக்கி வீச படுகிறதோ அதே போன்று பலமான காற்று வீசத் தொடங்கி புயல் உருவாகும். இதனால் விமானம் வெடித்து சிதறும் வாய்ப்புகள் இருக்கிறது . பூமியின் மையப்பகுதியில் இதுபோன்ற பாதிப்புகள் அதிகமாக இருக்கும் ஆனால் அதற்காக துருவப் பகுதிக்கு சென்றால் பாதுகாப்பாக இருக்கலாம் என்று கிடையாது.

அங்கு கடல் அலைகள் 1,000 அடிக்கும் மேல் எழுந்து சுனாமி போன்ற பாதிப்பை ஏற்படுத்தும். இங்கு தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தால் துருவப் பகுதிகளில் தண்ணீரில் தத்தளித்து உயிரிழக்க நேரிடும். எனவே ஒரு நொடி உலகம் நிற்பதால் உலகில் இருக்கும் 99 சதவீத உயிர்கள் அழிந்துவிடும். மீதமிருக்கும் நுண்ணுயிர்கள் மூலமாக புதிய உயிர்கள் உருவாகும். அல்லது பூமி ஒரு நொடி நின்ற சமயத்தில் செவ்வாய்க்கிரகத்திலோ அல்லது விண்வெளியிலோ மனிதர்கள் இருந்தால் அவர்கள் மூலமாக மீண்டும் பல உயிர்கள் உருவாகும். ஆனால் பூமி சட்டென ஒருபோதும் நிற்காது. சுற்றும் வேகத்தை தான் குறைத்துக் கொண்டிருக்கிறது. பூமி நிற்க வேண்டுமானால் அதற்கு சுற்றும் வேகத்தை இன்னும் குறைக்க வேண்டும். அதற்கு இன்னும் லட்சம் வருடங்கள் ஆகலாம். பூமி வேகத்தை குறைத்து சுற்றுவதை நிறுத்தும் முன்பே சூரியனின் வெப்பம் தாங்காமல் உயிர்கள் அழிய வாய்ப்புகள் இருக்கிறது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *