தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் 45-வது புத்தகக் கண்காட்சியை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கி வைத்தார்

Loading

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் 45-வது புத்தகக் கண்காட்சியை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் 45-வது புத்தகக் கண்காட்சியை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கி வைத்தார். புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்த முதல்வர் அவர்கள், புத்தக அரங்குகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

5000 சதுர அடியிலான பொருநை ஆற்றங்கரை நாகரீகப் தொல்பொருள் கண்காட்சி அரங்கம் பார்வையிட்டார். மார்ச் 6-ஆம் தேதி வரை, காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னை புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.

சுமார் 800 அரங்குகளில் ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. புத்தக கண்காட்சியை மாணவர்கள் பார்க்க டிக்கெட் இலவசம். மற்றவர்களுக்கு ரூ.10 நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புத்தகக்காட்சி கான நுழைவு சீட்டை bapasi.com இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *