சென்னை மைலாப்பூர் பகுதியைச் சேர்ந்த அந்த 14 வயது பள்ளி மாணவி கடந்த 11ஆம் தேதியன்று திடீரென்று காணாமல் போயிருக்கிறார்

Loading

சென்னை மைலாப்பூர் பகுதியைச் சேர்ந்த அந்த 14 வயது பள்ளி மாணவி கடந்த 11ஆம் தேதியன்று திடீரென்று காணாமல் போயிருக்கிறார்.

காலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற மகள் இரவு நெடு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை என்பதால் அச்சமடைந்த அவரது தாய், மகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டிருக்கிறார். ஆனால் மகளின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்து இருக்கிறது.

இதை அடுத்து அவருடன் படிக்கும் தோழிகள் எல்லோருக்கும் போன் செய்து கேட்டு இருக்கிறார்கள். உறவினர்கள் வீடுகளிலும் தேடிப்பார்த்து இருக்கிறார்கள் . எங்கேயும் அந்த மாணவி கிடைக்கவில்லை . இதையடுத்து மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் பள்ளி மாணவியின் வீட்டிற்கு அருகில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தபோது பள்ளி மாணவி வாலிபர் ஒருவருடன் பைக்கில் மெரினா கடற்கரை நோக்கி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்திருக்கிறது. அந்த பைக்கின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தியபோது மயிலாப்பூர் தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்த இருபத்தொரு வயதான கார்த்திக்கு என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்திருக்கிறது.

கார்த்திக் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தியபோது கார்த்தி காலையில் இருந்து வீட்டிற்கு வரவில்லை எங்கேயோ சென்று இருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார்கள். அதன் பின்னர் போலீசார் கார்த்திக்கின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது கார்த்திக் கண்ணகி நகர் பகுதியில் இருப்பதாக செல்போன் சிக்னல் காட்டியிருக்கிறது. அதன்பின்னர் போலீசார் செல்போன் சிக்னல் உடன் சென்ற போது சென்னை நகரில் கார்த்திக்கின் உறவினர் ஒருவர் வீட்டில் இருப்பதாக சிக்னல் காட்டி இருக்கிறது .

அதிகாலை 4 மணிக்கு அதிரடியாக போலீசார் அந்த வீட்டிற்குள் புகுந்து சோதனை செய்தபோது பள்ளி மாணவியை காலை முதல் அந்த அறையில் அடைத்து வைத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்திருக்கிறது. போலீசாரை பார்த்ததும் அந்த பள்ளி மாணவி, நடந்ததைக் கூறி கதறி இருக்கிறார்.

பள்ளி செல்லும் போதெல்லாம் பின் தொடர்ந்து வந்து காதலிப்பதாக சொன்னதால், தானும் காதலித்து வந்திருக்கிறார். அந்த பள்ளி மாணவியை காதலித்து வந்த கார்த்திக் திடீரென்று மெரினா பீச்சுக்கு சென்று வரலாம் என்று அழைத்திருக்கிறார். அதன்படி மாணவியின் வீட்டுக்கு சென்று அங்கிருந்து பைக்கில் அழைத்துக் கொண்டு பீச்சுக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து கண்ணகி நகர் பகுதிக்கு சென்று அறையில் அடைத்து வைத்து தொடர் பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்.

இதையடுத்து மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார் கார்த்திக் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

0Shares

Leave a Reply